ரஜினியின் பாராட்டால் மகிழ்ந்த ஜெயம் ரவி

மணி­ரத்­னம் இயக்­கிய 'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தில் பொன்­னி­யின் செல்­வ­னாக நடித்­தி­ருந்த ஜெயம் ரவி மகிழ்ச்­சிக்­க­ட­லில் மிதந்­து­கொண்டு இருக்­கி­றார். கார­ணம் படத்­தின் நாய­க­னாக நடித்­தது ஒரு பக்­கம். படத்­தைப் பார்த்து ­விட்டு ரஜி­னி­காந்த் இவ­ரைத் தொடர்­பு­கொண்டு பாராட்­டி­யது மறு­பக்­கம் என இரட்­டிப்பு மகிழ்ச்சி­யில் இருக்­கி­றார் ஜெயம் ரவி.

பொன்­னி­யின் செல்­வ­னில் அருண்­மொழிவர்­ம­னாக (ராஜராஜ சோழன்) நடி­கர் ஜெயம் ரவி நடித்­துள்­ளார். படத்­தின் பாதி­யில்தான் ஜெயம் ரவி தோன்­று­

வார்.

அவர் தோன்­றும் சிறிய இடை­வெ­ளி­யில் அசா­தா­ரண நடிப்பை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக படம் வெளி­யா­ன­தி­ல் இருந்து சமூக வலைத்­த­ளங்­களில் பாராட்­டு­கள் குவி­கின்­றன.

மேலும், இந்த வேடத்­தில் ஜெயம் ரவி நடிக்­கி­றார் என செய்­தி­கள் வெளி­யா­ன­போது, அவ­ரது உடல்­வாகு, குரலை வைத்து நிறைய கேலி­களும் விமர்­ச­னங்­களும்

எழுந்­தன.

ஆனால், படம் வெளி­யான பிறகு, அந்த விமர்­ச­னங்­க­ளுக்கு தனது நடிப்­பின் மூலம் ஜெயம் ரவி பதி­லடி கொடுத்­துள்­ளார் என

கருத்­து­கள் வெளி­யா­கியுள்ளன.

இந்­நி­லை­யில், படத்­தைப் பார்த்துவிட்டு, சூப்­பர் ஸ்டார்

ரஜி­னி­காந்த் தொலை­பே­சி­யில் ஜெயம் ரவியை அழைத்து, அவ­ரது நடிப்­பைப் பாராட்­டி­யுள்­ளார். இந்­தத் தக­வலை ஜெயம் ரவி தனது டுவிட்­டர் பக்­கத்­தில் பகிர்ந்­துள்­ளார்.

அதில் அவர், "உங்­க­ளு­ட­னான அந்த ஒரு நிமிட உரை­யா­டல் என் நாளை, எனது இந்த ஆண்டை அழ­காக மாற்­றி­யுள்­ளது. எனது வாழ்க்­கைக்கு புதிய அர்த்­தத்தைக் கொடுத்­துள்­ளது. உங்­க­ளது அன்­பான வார்த்­தை­க­ளுக்­கும் குழந்­தைத்­த­ன­மான உற்­சா­கத்­திற்­கும் நன்றி தலைவா!

"நீங்­கள் படத்­தை­யும் எனது நடிப்­பை­யும் விரும்­பி­னீர்­கள் என்­பதை அறிந்து மிக­வும் மகிழ்ச்சி­யும் பணி­வும் ஆசீர்­வா­த­மும் பெற்­றேன்," என குறிப்­பிட்­டுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!