தீபாவளிக்கு வரும் ‘சர்தார்’

'சர்­தார்' படத்­தின் வெளி­யீட்டை ரசி­கர்­கள் போன்றே அதன் நாய­கன் கார்த்­தி­யும் ஆவ­லு­டன் எதிர்­பார்த்து காத்­தி­ருக்­கிறார்.

தீபா­வ­ளி­யை­யொட்டி திரைகாண உள்ள இப்­படத்­தின் குறுமுன்­னோட்டக் காட்­சித் தொகுப்­புக்குச் சமூக ஊட­கங்­களில் நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

'இரும்­புத்­திரை', 'ஹீரோ' என வித்­தி­யா­ச­மான கதைக்­க­ளங்­க­ளு­டன் ரசி­கர்­க­ளைக் கவர்ந்த பி.எஸ்.மித்­ரன் இயக்­கத்­தில் உரு­வாகி உள்­ளது 'சர்­தார்' திரைப்படம்.

உள­வா­ளி­கள் சம்­பந்­தப்­பட்ட கதை என்­ப­தால் தொடக்­கம் முதல் இறு­தி­வரை பர­ப­ரப்­புக்­கும் விறு­விறுப்­புக்­கும் குறை­வி­ருக்­காது என இயக்­கு­நர் தரப்பு இரட்­டிப்பு உத்­த­ர­வா­தம் அளிக்­கிறது.

இது வழக்­க­மான உள­வா­ளி­கள் கதை­யாக இருக்­கா­தாம். முப்­பது ஆண்­டு­களுக்கு முன்பு ஓர் உள­வா­ளி­யு­டன் தொடர்­பு­டைய சம்­ப­வத்­தால் அப்­போது ஏற்­பட்ட பாதிப்பு இன்­ற­ள­வும் நீடிப்­பது குறித்து இப்­ப­டத்­தில் அல­சப்­பட்­டி­ருக்­கிறது.

"உள­வாளி என்­றாலே நாடுவிட்டு நாடு சென்று தக­வல்­களைச் சேக­ரிப்பது என்று நினைக்­கி­றோம். ஆனால் நம்மைச் சுற்­றியே ஏரா­ள­மான உள­வாளி­கள் உள்ள­னர். உளவு என்­பது ஒரு நாட்­டின் ராணுவ ரக­சி­யங்­களை மட்­டும் தெரிந்துகொள்­வ­தற்­கான பணி­யல்ல.

"ஒவ்­வொரு சின்ன விஷ­யத்­தி­லும் பல உண்­மை­கள் மறைந்­து­கி­டக்­கும். அதை விவ­ரித்­துள்­ளோம். மேலும் உலக அர­சி­யல் ஒரு சாமா­னி­யனை எவ்­வாறு, எந்த அள­வுக்கு பாதிக்­கும் என்­ப­தை­யும் இந்­தக் கதை பேசும். தங்­கள் நிழல்­கூ­டப் பின்­தொ­ட­ரா­த­படி நட­மா­டும் நிழல் மனி­தர்­க­ளைப் பற்­றிய கதை என்­றும் சொல்­ல­லாம்," என்­கி­றார் மித்­ரன்.

இது­போன்ற கதை­களில் நடிக்­கும் நாய­கன் நூறு விழுக்­காட்டுக்­கும் மேல் உழைக்க வேண்­டி­யிருக்­கும் என்று குறிப்­பி­டு­ப­வர், அதற்கு கார்த்தி பொருத்­த­மா­ன­வ­ராக இருப்­பார் என்­ப­தால்­தான் அவரை அணு­கி­ய­தா­கச் சொல்­கி­றார்.

"இந்­தக் கதைக்­குள் நுழைந்து, நன்கு ஆராய்ந்து, தர­மாக நடிக்க வேண்­டிய பொறுப்பு கார்த்­திக்கு இருந்­தது. அதைத் திறம்­ப­டச் செய்­தார். இதில் வய­தான கார்த்­தி­யும் அப்­பா­வாக வரு­கி­றார். இளை­ஞர், வய­தா­ன­வர் இரு­வருக்­கும் கணி­ச­மான வித்­தி­யா­சங்­கள் இருக்க வேண்­டும் என்­ப­தால் அந்த வித்­தி­யா­சங்­களை வெளிப்­ப­டுத்­து­வ­தில் மிக­வும் கவ­ன­மாக இருந்தார்.

"ஒப்­பனை போடு­வ­தற்கு மட்­டுமே மூன்று மணி நேர­மா­கும். படத்­தில் சண்­டைக் காட்­சி­கள் நிறைந்­தி­ருக்­கும். அத­னால் அதி­கம் உழைத்­தார். ஆனால் எதற்­கா­க­வும் அவர் சலித்­துக்கொண்டதே இல்லை," என்­கி­றார் மித்­ரன்.

'சர்­தார்' என்­பது பெர்­ஷிய மொழி வார்த்­தை­யாம். அதற்கு 'படைத்­த­லை­வன்' என்று பொருள். இந்­தி­யத் தலை­வர்­களில் ஒரு­வரான வல்­ல­பாய் பட்டேலுக்கு 'சர்­தார்' என்ற பட்­டம் உள்­ளது.

இந்­தப் படத்­தில் சர்­தார் என்­ப­தற்கு இன்­னொரு பொருளும் உள்­ளது என்­பதை விவ­ரித்­துள்­ள­ன­ராம்.

"இந்­தப் படத்­தில் நடிக்­கும் நாய­க­னுக்கு கதை­யில் தீவிர ஈடு­பாடு இருந்­தால்­தான் படத்தை முடிக்க இய­லும். ஆர்­வம், பிடி­வா­தம், அர்ப்­ப­ணிப்பு என எல்­லாம் தேவை. இதை முழு­மை­யாக உணர்ந்து நடித்­தார் கார்த்தி.

"ஒரு கட்­டத்­தில் ஐந்து நாள் இடை­வி­டா­மல் படப்­பி­டிப்பை நடத்த வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­டது. அந்த ஐந்து நாள்களும் அவர் இரு­பத்து நான்கு மணி நேர­மும் நடித்­தார்," என்கிறார் மித்­ரன்.

'சிறுத்தை', 'தீரன் அதி­கா­ரம் ஒன்று' படங்­களில் கார்த்தி காவல்­துறை அதி­கா­ரி­யாக நடித்­தி­ருப்­ப­தால், அவ­ரது நடிப்­பில் முந்­தைய படங்­கள், கதா­பாத்­தி­ரங்­க­ளின் சாயல் வந்து­வி­டக் கூடாது என்­ப­தில் கவ­ன­மாக இருந்­த­ன­ராம். இந்­தப் படத்­தில் கார்த்தி­யின் வழக்­க­மான அலப்­பறை, கிண்­டல் இருக்­கு­மாம்.

"எப்­போ­துமே நம் கண்­முன்னே நடக்­கும் நிகழ்வுகளை மட்­டுமே உள்­வாங்­கிக் கொள்­கி­றோம். ஆனால் அந்­தச் சம்­ப­வங்­க­ளின் பின்­ன­ணி­யில் வேறொரு கார­ணம் இருக்­கக்­கூ­டும். அப்­ப­டிப்­பட்ட பின்­ன­ணி­களை விரி­வு­ப­டுத்­திப் பார்ப்­பது எனக்­குப் பிடிக்­கும்.

"ஒரு நிகழ்வு நடந்­தால், அது ஏன் நடக்­கிறது என்­ப­தற்கு ஓர் அர­சி­யல் கார­ணம் உள்­ளது. அதைக் கண்டறியவும் விரும்­பு­வேன். அதி­லி­ருந்­து­தான் என் கதை­கள் உரு­வா­கும்.

"இப்­போது 'சர்­தார்' படத்­தி­லும் அப்­படிப்­பட்ட ஒன்றுதான் அடங்கி உள்­ளது. திரு­வள்­ளு­வரே உள­வைப் பற்றி எழு­திவிட்­டார். ஒரு நாடு, அர­சாங்­கம் உரு­வான காலத்­தில் இ­ருந்து உளவு பார்த்­தல் என்­பது நடந்து வரு­கிறது.

"நமக்கு மிக அரு­கி­லேயே உளவு இருக்­கிறது. 'இரும்­புத்­திரை' படத்­தில்­கூட, 'நம் அத்தனை பேரி­ட­மும் கைப்­பேசி இருக்­கிறது, அதன் மறு­பக்­கம் நமக்­குத் தெரி­யாது' என்று குறிப்­பிட்டு சில விவ­ரங்­கள் எடுத்­துச் சொல்லி எச்­ச­ரிக்கை செய்­தேன்.

"அது­போன்ற திரைக்­க­தை­கள் எனக்­குப் பிடிக்­கும்; ரசி­கர்­க­ளுக்­கும் பயன்­படும்," என்­கி­றார் இயக்குநர் பி.எஸ். மித்­ரன்.

'சர்தார்' படத்தில் கார்த்தி ஆறு வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ளது குறித்து படக்குழுவினர் வாய்திறக்க மறுக்கிறார்கள்.

எனினும், கார்த்தியின் ரசிகர்கள் இதுகுறித்த பல்வேறு தகவல்களைச் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!