லைகா தயாரிப்பில் இரண்டு படங்களில் ரஜினி

தமிழ் சினி­மா­வின் முன்­னணி நடி­க­ரான ரஜி­னி­காந்த் தற்­போது நெல்­சன் திலீப் குமார் இயக்­கும் 'ஜெயி­லர்' திரைப்­ப­டத்­தில் நடித்து வரு­கி­றார். இதற்­கான படப்­பி­டிப்பு சென்­னை­யைச் சுற்­றி­யுள்ள பகு­தி­களில் நடை­பெற்று வரு­கிறது.

இந்­தத் திரைப்­ப­டத்தை தொடர்ந்து சிபி சக்­க­ர­வர்த்தி இயக்­கும் புதிய படத்­தில் ரஜி­னி­காந்த் நடிக்க உள்­ளார். அதனையடுத்து தேசிங்கு பெரி­ய­சாமி

அல்­லது கார்த்­திக் சுப்­பு­ராஜ் அல்­லது ஐஸ்­வர்யா ரஜி­னி­காந்த் இயக்­கத்­தில் ரஜினிகாந்த் நடிக்­க­லாம் எனக் கூறப்­ப­டு­கிறது.

அந்த இரண்டு திரைப்­ப­டங்­க­ளை­யும் லைகா

நிறு­வ­னம் தயா­ரிக்க உள்­ளது என தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது. அதற்­கான ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தாகி­உள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

தனுஷ் தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ள படம் 'வாத்தி'. இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

நேரடியாக தெலுங்கு, தமிழ் மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் 'ஓடிடி' வெளியீட்டு உரிமையை 'ஆஹா' இணையத்தளம் பெரும் விலைக்கு வாங்கியுள்ளது. இப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் விரைவில் 'வாத்தி' படத்தின் முதல் பாடலும் வெளியாக உள்ளது.

கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு இருக்கும் படம் 'அஜினோமோட்டோ'. 'அஜினோமோட்டோ' உணவுக்கு ருசியைக் கொடுக்கும். ஆனால் அது உடலுக்கு கேடு விளைவிக்கும். அதைப்போல சுவாரசியமாக இருக்கும் பல விஷயங்கள் பின்னர் பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்கிறார் படத்தின் இயக்குநர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!