பிக்பாஸ் 6 நாளை தொடக்கம்; புதிய வீட்டின் புகைப்படங்கள்

பிக்பாஸ் தமிழ் சீசன்-6 தொடக்க நிகழ்ச்சி நாளை (அக்டோபர் 9) இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு பிரம்மாண்ட வெளியீட்டு விழா நடைபெறவுள்ள நிலையில், பிக்பாஸ் சீசன்-6 நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இது பல நாடுகளில் பிக் பிரதர் எனும் பெயருடனும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்தியாவில்மட்டும் பல மாநிலங்களில், பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் ஆறாவது சீசன் தொடங்கப்படவுள்ளது.

மேலும் இதற்கான போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் பட்டத்தைத் தட்டி சென்றார். இதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும் பட்டத்தைக் கைப்பற்றினர். சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள விரும்பும் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

பிக்பாஸ் 6-வது சீசனில் தொகுப்பாளர் டிடி, பாடகி ராஜலட்சுமி, தொலைக்காட்சி நடிகைகள் அர்ச்சனா, ரோஷினி, ஸ்ரீநிதி, குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா, கதாநாயகிகள் ஷில்பா மஞ்சுநாத், மனிஷா யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!