‘என் அடுத்த இலக்கு அஜித்’

"விஜய்­யு­டன் நடித்­து­விட்­டேன். அடுத்து அஜித் படத்­தில் நடிப்பது­தான் எனது இலக்கு," என்­கி­றார் 'பிகில்' அம்­ரிதா. சமூக ஊட­கங்­களில் இவரை மில்­லி­யன் கணக்­கா­னோர் பின்­தொடர்­கின்­ற­னர். வசிப்­பது பெங்­க­ளூ­ரில் என்­றா­லும் தமிழில் சர­ள­மா­கப் பேசு­கி­றார்.

'லிஃப்ட்' படத்­தில் 'பிக்­பாஸ்' கவி­னு­டன் இணைந்து நடித்த பின்­னர் சுந்­தர்.சி.யின் 'காபி வித் காதல்' படத்­தில் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளார் அம்­ரிதா. இப்­ப­டத்­தின் விளம்­பர நிகழ்­வில் பங்­கேற்றபோது படக்­கு­ழு­வில் உள்ள பலர் அம்­ரி­தாவை வெகு­வா­கப் புகழ்ந்து பேசி­னர்.

இந்­தப் படத்­துக்­காக இவரை சிபா­ரிசு செய்­தது பட நாய­கர்­களில் ஒரு­வ­ரான ஜெய்தானாம். முன்­னணி நடி­கர் எனும் பந்தா இல்­லா­மல் தம்­மு­டன் இயல்­பா­கப் பேசி­ய­தா­கச் சொல்­கி­றார்.

"படத்­தின் முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்­பில் ஜெய்யை கன்­னத்­தில் அறை­வது போன்ற காட்சி உள்­ளது. இதைப் பார்த்த பல­ரும் உண்­மை­யா­கவே நான் அவரை அடித்­து­விட்­ட­தா­கக் கரு­து­கின்­ற­னர். வாய்ப்பு பெற்­றுத் தந்­த­வரை யாரா­வது தாக்­கு­வார்­களா?

"அது நிஜ அடி அல்ல. விரல்­கள் மட்டும் கன்­னத்­தைத் தொட்ட மாதிரி இருக்­கும். ஜெய்யை நேரில் சந்­தித்­த­போது, நீண்ட நாள் பழக்­க­மான நண்­ப­ரைப் போல் தெரிந்­தார். முதல் நாள் படப்­பி­டிப்­பி­லேயே ஜாலி­யாக சிரித்­துப் பேசி, நீண்ட நாள் பழகிய மாதிரி பேசி­னார். நடிக்­கும்­போது நிறைய ஆலோ­ச­னை­கள் கொடுத்­தார். காட்­சி­கள் யதார்த்­த­மாக இருக்க எனக்­காக அவர் அக்கறை­யு­டன் பேசி­யது பிடித்­தி­ருந்­தது. அதே­போல் மற்ற கலை­ஞர்­களும் நல்­ல­வி­த­மாக நடந்துகொண்­ட­னர்.

"அதே­போல் நடி­கர் ஜீவா­வு­டன் பேசிப் பழ­கும் வாய்ப்­பும் கிடைத்­தது. என்­னைப் போல் வளர்ந்து வரும் இளம் கலை­ஞர்­களுக்கு ஜெய், ஜீவா போன்ற அனு­பவ நடி­கர்­க­ளு­டன் இணைந்­து பணியாற்றும் அனு­ப­வம் முக்­கி­யம். இந்த மாதி­ரி­யான நினை­வு­கள் காலங்­கள் கடந்து மன­துக்கு மகிழ்ச்­சி­யை­யும் நிறை­வை­யும் கொடுக்­கும்," என்கிறார் அம்­ரிதா.

சுந்­தர்.சி.யுடன் பணி­யாற்­றிய அனு­ப­வம் குறித்து?

உண்­மை­யைச் சொல்ல வேண்­டுமென்­றால் முதல் நாள் படப்­பி­டிப்­பில் பயந்­து­விட்­டேன். மூத்த இயக்­கு­நர் என்­பது ஒரு பக்­கம் எனில் முதல் நாளே ஒன்­ற­ரைப் பக்­கங்­க­ளுக்கு நீண்ட வச­னத்தைக் கொடுத்து நடிக்­கச் சொன்னார்.

"காபி வித் காதல்' முதல்­நாள் படப்­பி­டிப்­பின்­போது நான் பேய் அடித்த மாதிரி மிரண்டு போயி­ருந்­தேன். என்­னால் அந்த வச­னத்தை மனப்­பாடம் செய்து உட­னுக்­கு­டன் பேசி நடிக்க முடி­யும். இந்த நம்­பிக்கை இருந்­தா­லும் பெரிய இயக்­கு­நர் முன் சரி­யா­க நடிக்க வேண்­டும் என்ற சின்ன அழுத்­தம் இருந்­தது.

"ஆனால் சுந்­தர்.சி சார் படக்­கு­ழு­வில் உள்ள ஒவ்­வொ­ரு­வருடனும் அன்­பா­கப் பழ­கு­வார். படப்­பிடிப்­பு அல்லது எந்தவொரு நிகழ்ச்­சி­யாக இருந்தாலும் அனை­வ­ருக்­கும் உரிய மரியாதை தரு­வார்," என்று சுந்­தர்.சி. புரா­ணம் பாடு­கி­றார் அம்­ரிதா.

சமூக ஊட­கங்­களில் இவ­ரைப் பின்­தொ­ட­ரும் ரசி­கர்­களில் பலர் அஜித்­துடன் எப்­போது நடிக்­கப் போகி­றீர்­கள் என்று தொடர்ந்து கேட்­கி­றார்­க­ளாம். தாம் அதற்குத் தயா­ராக இருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"அஜித்துடன் நடிக்க யாருக்­குத்­தான் ஆசை இருக்­காது. அத்­த­கைய வாய்ப்­புக்­கா­க காத்­தி­ருக்­கி­றேன். வாய்ப்பு வரும்­போது கண்­டிப்­பாக நடிப்­பேன்," என்­கி­றார் அம்­ரிதா.

'பிகில்' படத்­தில் விளை­யாட்டு வீராங்­க­னை­யாக நடித்­த­போது எத்­தகைய உடற்­கட்­டு­டன் காணப்­பட்­டாரோ, அதே­போன்­று­தான் இப்­போதும் காட்­சி­ அ­ளிக்­கி­றார். ஒரு­நாள் விடா­மல் உடற்­பயிற்சி செய்­வ­து­தான் தமது கட்­டு­ட­லின் ரக­சி­யம் என்­கி­றார்.

"பள்ளி, கல்­லூரி நாள்­களில் விளை­யாட்­டுப் போட்­டி­களில் ஆர்­வ­மா­கக் கலந்து­கொள்­வேன். அந்­தப் பழக்­கத்­தால் எப்­போ­தும் புத்­து­ணர்ச்­சி­யு­ட­னும் துடிப்­பா­க­வும் செயல்­பட முடி­கிறது. அதே­போல் பணிச் சுமை இருந்­தாலும் நட­னப் பயிற்­சி­யில் தவ­றா­மல் ஈடு­படு­வேன். பிடித்த உணவு வகைகள் அனைத்தையும் வயிறார சாப்பிடு வேன். அதற்கு ஈடாக கூடுதல் நேரம் உடற்பயிற்சி செய்வேன்," என்கிறார் அம்ரிதா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!