இயக்குநரால் கோபத்திற்கு ஆளான விஜய்

தமிழ் இயக்­கு­நர்­க­ளின் இயக்கத்­தில் நடித்து வந்த விஜய் தற்­பொ­ழுது தெலுங்கு இயக்­கு­நர் வம்­சி­யின் இயக்­கத்­தில் 'வாரிசு' என்ற படத்­தில் நடித்­துக்­கொண்டு இருக்­கி­றார். படப்­பி­டிப்பை இயக்­கு­நர் தாம­தப்­ப­டுத்­து­வ­தால் இன்­னும் பல நாள்­க­ளுக்கு படப்­பி­டிப்பு நீடிக்கும் என்பதால் நடி­கர் விஜய் நிம்­மதி இழந்து கோப­மாக

இருப்­ப­தாக படப்­பி­டிப்புக் குழு­வி­னர் கூறி வரு­கின்­ற­னர்.

சாதா­ர­ண­மாக விஜய் ஒரு படத்­தில் நடிக்­கத் தொடங்­கிய பிறகு பாதிப் படம் முடி­யும் நிலை­யில் தனக்குப் பிடிக்­க­வில்லை என்­றால் சுத்­த­மாக விருப்­பம் காட்ட மாட்­டா­ராம்.

அப்­படி ஒரு நிலை­தான் 'வாரிசு' படத்­திற்கும் வந்­தி­ருக்­கிறது. படம் இந்த வாரம் முடி­யும் அடுத்த வாரம் முடி­யும் என்று எதிர்பார்க்கப்படும் நேரத்­தில் வம்சி விஜய்­யி­டம் இன்­னும் 18 நாள்­கள் படப்­பி­டிப்பு உள்ளது என்றும் அதில் அவர் நடித்­துக் கொடுக்­க­வேண்­டும் என்றும் கேட்டு நடிக்க வைத்­துக்கொண்­டி­ருக்­கி­றார்.

இது­தான் விஜய்க்கு உச்­ச­கட்ட கோபத்தை வர­வ­ழைத்து இருக்­கிறது. ஏனென்­றால் விஜய் இந்­தப் படத்தை முடித்­துக் கொடுத்­து­விட்டு அடுத்­த­தாக லோகேஷ் கன­க­ராஜ் இயக்­கத்­தில் நடிக்க இருக்­கி­றார்.

அந்­தப் படத்­தின் படப்­பி­டிப்­பும் வெகு­வி­ரை­வில் ஆரம்­பிக்­கப்­பட இருக்­கிறது. அதற்­கான அனைத்து வேலை­களும் முடிந்து தற்பொழுது படக்குழு தயார்நிலை­யில் இருக்­கிறதாம்.

விஜய் மட்­டும் வந்­து­விட்­டால் லோகேஷ் கனகராஜ் படப்­பி­டிப்பை தொடங்கிவிடுவார். இப்­படி ஒரு சூழ்­நிலை இருக்­கும்­போது வம்சி தன்­னு­டைய விருப்பத்திற்குப் படப்­பி­டிப்பை இழுத்­த­டித்து வரு­வது விஜய்க்கு சுத்­த­மாக பிடிக்­க­வில்லை. இருந்­தா­லும் படத்தை முடித்­துக் கொடுத்தே ஆகவேண்­டும் என்­ப­தால் அவர் சகித்­துக்கொண்டு நடித்து வரு­கி­றா­ராம்.

வம்சி மட்­டும் படப்­பி­டிப்பு முடிந்துவிட்­டது அவ்­வ­ள­வு­தான் என்று கூறி­னால் போதும் ஆளை விடு சாமி என்று விஜய் ஒரே கும்­பி­டாக

போட்­டு­விட்டு லோகேஷ் கன­க­ராஜ் பக்­கம் சென்றுவிடு­வார்.

அந்த அள­வுக்கு விஜய் 'வாரிசு' திரைப்­படக் குழு மீது மிக­வும் வருத்­தத்­தில் இருக்­கி­றார். இது­வரை விஜய் நடித்த படங்­க­ளி­லேயே மிகவும் மந்­த­மாக படப் பிடிப்பு நடத்தப்பட்ட படம் இதுதானாம்.

இதற்கிடையில் படம் வரும் பொங்­க­லுக்கு அஜித்­தின் 'துணிவு' படத்­து­டன் மோதும் என்று அறி­வித்துள்ள நிலை­யில் இதுபோல் படப் பிடிப்பு நடந்தால் பொங்கலுக்குப் படம் வெளிவருவது கடினம் என்பது தான் தற்­போது விஜய்யை அதி­க­மாக கோபப்­ப­டுத்­தி­யுள்­ளது.

அவ­ரைப்­போன்று ரசி­கர்­க­ளுக்­கும் இந்தப் படத்­தின் மீதான எதிர்­பார்ப்பு தற்­போது கொஞ்­சம் குறைந்து வரு­கிறது. ஏனென்­றால் லோகேஷ் கன­க­ராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்காகத் தான் விஜய் ரசி­கர்­கள் காத்திருக்கிறார்கள். அத­னா­லேயே 'வாரிசு' திரைப்­ப­டத்தின் மீது ரசிகர்களுக்கு தற்­போது சுவா­ர­சி­யம் குறைந்து காணப்­ப­டு­கிறது.

அஜித்­தின் 'துணிவு' படத்தை 'ரெட் ஜெயண்ட்' மூலம் வெளி­யிட உத­ய­நிதி ஏற்­பாடு செய்­தி­ருக்­கும் நிலை­யில் 'வாரிசு' படத்­திற்கு ஒரு சிக்­கலை ஏற்­ப­டுத்தி இருப்

­ப­தாக கோடம்­பாக்­கத்­தில் கூறப்­ப­டு­கிறது.

கார­ணம் 'வாரிசு' படத்தை வாங்க 'ரெட் ஜெயண்ட்' முயற்சி செய்­தி­ருக்­கிறது. ஆனால் அது முடி­யா­மல் போன­தால் 'வாரிசு' பொங்­க­லுக்கு முன்­ன­தா­கவே வெளி­யா­னால் அது வசூலை

அள்­ளி­வி­டும் என்­ப­தால் அதற்கு இடம் கொடுக்­கா­மல் உத­ய­நிதி, இரண்டு படங்­க­ளை­யும் ஒரே தேதி­யில் வெளி­யிட சென்னையில் திரை­

ய­ரங்­கு­களை ஒதுக்கி இருப்­ப­தாக கூறப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!