திரிஷாவின் படங்களைத் தூசு தட்டும் தயாரிப்பாளர்கள்

திரிஷா 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்த பிறகு அவர் மீண்டும் பல படங்களில் நடிக்க கதை கேட்டும் சில படங்களில் நடிக்க கையெழுத்திட்டும் வருகிறார்.

இந்நிலையில், திரிஷா நாயகியாக நடித்த மூன்று படங்கள் கடந்த சில ஆண்டுகளாக வெளிவராமல் பல்வேறு பிரச்சினைகளால் முடங்கிப் போயுள்ளன.

அந்தப் படங்களை எப்படியாவது சூட்டோடு சூடாக வெளியிட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளனர் 'சதுரங்க வேட்டை 2', 'கர்ஜனை',

'ராங்கி' படங்களின் தயாரிப்பாளர்கள்.

இவற்றில் 'ராங்கி' படம் இன்னும் வெளிவராமல் இருப்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. இப்படத்தை 'லைக்கா' நிறுவனம் தயாரித்து, 'எங்கேயும் எப்போதும்' படத்தை இயக்கிய சரவணன் இப்படத்தை இயக்கியிருந்தார்.

'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷா ஒப்பந்தமானபோது கேலி செய்தவர்கள்கூட படத்தைப் பார்த்ததும் பாராட்டினார்கள். இப்படம் மூலம் மீண்டும் முன்னணி நாயகியாகி உள்ளார் திரிஷா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!