சீனு ராமசாமி: ஜி.வி.பிரகாஷ் இனி ‘வெற்றித்தமிழன்’

சீனு ராம­சாமி இயக்­கத்­தில் ஜி.வி.பிர­காஷ் நாய­க­னாக நடித்­துள்ள படம் 'இடி முழக்­கம்'. விரை­வில் வெளி­யீடு காண உள்ள நிலை­யில், இப்­ப­டம் குறித்த சுவா­ர­சி­ய­மான தக­வல்­களும் வெளி­யாகி உள்­ளன.

'இடி முழக்­கம்' இளை­யர்­க­ளுக்­கான படம் என்­றும் அவர்­க­ளுக்கு உத­வக்­கூ­டிய பல உரை­யா­டல்­கள் படத்­தில் இடம்­பெற்­றுள்­ள­தா­க­வும் சொல்­கி­றார் சீனு ராம­சாமி.

"நம் ஒவ்­வொ­ரு­வர் வாழ்­வி­லும் சுமார் இரு­பது முதல் முப்­பது வயதுக்­குள்­தான் வாழ்க்­கையைப் புரட்­டிப்­போ­டக்­கூ­டிய விஷ­யங்­கள் நடந்­தி­ருக்­கும். ஏதோ ஓர் ஆசை மன­தோ­ரம் இருக்­கும். ஏதா­வது ஒரு தவற்­றைச் செய்­யத் தூண்­டும். மனம் கிடந்து அல்­லா­டும்.

"2000வது (இரண்­டா­யி­ர­மா­வது) ஆண்­டுக்­குப் பிறகு பிறந்­த­வர்­களை அணுக்­க­மா­கக் கவ­னித்­துள்­ளேன். ஒரு­வரையொரு­வர் புரிந்­து­கொள்­வதற்­கும் அவ்­வாறு நடக்­கா­மல் போவ­தற்­கும் இடையே பயணத்தை தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றார்­கள்.

"இப்­ப­டிப்­பட்ட வாழ்க்­கைக்­குள்­தான் வஞ்­சம், நட்பு, காதல், உறவு என எல்­லா­வற்­றுக்­கும் இடம்­கொடுக்க வேண்­டி­யுள்­ளது.

"புரி­தல் என்­பது இல்­லா­த­போது­தான் ஆத்­தி­ரம், துரோ­கம், வஞ்­சம் எனக் குணக்­கே­டு­கள் பெரு­கு­கின்றன. அப்­படி ஒரு குடும்­பத்­தில் சதி­யும் விதி­யும் புகுந்து ஆடு­கிற ஊழிக் காற்­று­தான் 'இடி முழக்­கம்.'

"என் படத்­தைப் பார்த்­து­விட்டு திரை­ய­ரங்­கில் இருந்து கிளம்­பும்­போது வாழ்க்கை மீது நம்­பிக்கை பிறக்­கும். உடன் இருப்­ப­வர்­கள் மீது வைத்­துள்ள அன்பு கூடும்.

"இந்த 'இடி­ மு­ழக்­கம்' திரைப் படம் மனி­தர்­கள் ஒரு­வரை­யொ­ரு­வர் புரிந்­து­கொள்­வ­தன் அனு­ ப­வம் பற்றி விரி­வா­கப்பேசும்," என ஆணித்­த­ர­மா­கச் சொல்­கி­றார் இயக்­கு­நர் சீனு ராம­சாமி.

"ஜி.வி.பிர­கா­ஷு­டன் பணி­யாற்­றிய அனு­ப­வம்?

"இரு­வ­ரும் இணைந்து பணி­யாற்­று­வது குறித்து நீண்டநாள்­களாகப் பேசி வந்­தோம். இரு­வருக்­கும் இடையே பேரன்­புப் பரி­மாற்­றம் ஒன்று எப்­போ­தும் இருக்­கும். ஜிவி­யின் நடிப்பு வெகு­வாக மெரு­கேறி உள்­ளது. இப்­போது அவர் நடிக்­கும் படங்­களில் அவர் வெளிப்­ப­டுத்­தும் நடிப்பை பல இடங்­களில் ரசிக்க முடி­கிறது.

"தயா­ரிப்­பா­ளர்­க­ளின், இயக்­கு­நர்­க­ளின் சிர­மங்­கள் புரிந்­த­வர் ஜி.வி. படப்­பி­டிப்பு இடை­வே­ளை­களில்கூட அடுத்­த­டுத்த படங்க ளுக்கு மெட்டமைத்­துக் கொண்­டி­ருப்­பார். கடி­ன­மான உ ழைப்­பாளி.

"சினி­மா­வைத் தவிர வேறு எதி­லும் அவர் தன் கவ­னத்தைச் சித­ற­வி­டு­வதே இல்லை. ஒரு காட்சி எப்­படி அமைய வேண்­டும், எல்­லா­ரும் எப்­படி நடிக்க வேண்­டும் என நாம் மன­தில் ஒரு­வித கற்­பனை செய்து வைத்­தி­ருப்­போம்.

"அதைக் கச்­சி­த­மா­கப் புரிந்­து­கொண்டு எளி­தில் நடித்­து­விட்­டுப் போகி­றார் ஜி.வி. அவ­ருக்கு நடிப்பு நல்ல பழக்கமாகிக் கைவந்­து­விட்­டது," என்று பாராட்டு­கி­றார் சீனு.

'இடி முழக்­கம்' படத்­தின் சிறப்­புக்­காட்­சி­யைப் பார்த்து ரசித்த உத­ய­நிதி, தாமே சீனு ராம­சா­மியை தொடர்பு கொண்டு படம் குறித்து பாராட்­டிப் பேசி­யுள்­ளார்.

அது மட்டு­மல்ல, இந்­தப் படத்­துக்­காக ஜிவி பிர­கா­ஷுக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்­புண்டு என்­றும் குறிப்­பிட்­டா­ராம்.

விஜய்­சே­து­ப­திக்கு 'மக்­கள் செல்வன்' என்று தாம் வைத்த பெயர் நிலைத்­துள்­ள­தா­கச் சுட்­டிக்­காட்­டு­ப­வர், அடுத்து ஜிவிக்கு 'வெற்­றித் தமி­ழன்' என்று பெயர் வைக்­கப்­போ­வ­தா­கச் சொல்­கி­றார்.

'இடி ­மு­ழக்­கம்' எப்­ப­டிப்­பட்ட படம்?

''எப்­போ­தும் சரி­யான வடி­வத்தை எட்­டக்­கூ­டிய எளி­மை­யான திரைக்­கதை­யைக் கண்­ட­டைந்­து­விட முடி­யுமா என நினைப்­பேன். அது­தான் நிறைய மக்­க­ளைச் சென்­ற­டை­யும்.

"சில நல்ல விஷ­யங்­க­ளைச் சொல்ல முயற்சி எடுத்­துக்­கொள்­கி­றேன். என் ஒரு­வ­னால் திரைப்­ப­டத்­து­றையை மாற்­றி­ய­மைத்­து­விட முடி­யாது எனத் தெரி­யும். அதற்­காக என் முயற்­சி­யையே விட்­டு­விட மனசு தயா­ராக இல்லை.

"அத­னால்­தான் 'இடி முழக்­கம்' மாதி­ரி­யான படங்­களை எடுக்­கி­றேன். எனது பயணம் இதேபோன்று தொடரும் ," என்­கி­றார் சீனு ராம­சாமி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!