‘இது அனைவரையும் மிரள வைக்கும் கதை’

வழக்­க­மான திகில் கதை­களில் இருந்து மாறு­பட்டு ஒரு திகில் படத்தை தரப் போவ­தா­கச் சொல்­கி­றார் அறி­முக இயக்­கு­நர் எம்.சக்­தி­வேல்.

படத்­தின் நாய­கன் பரத்­தி­டம், இந்­தப் படத்­துக்­கான கதையை இவர் விவ­ரித்து முடித்த கையோடு, கால்­ஷீட் ஒதுக்க முன்­வந்­துள்­ளார். மேலும், இந்­தப் படம் நிச்­ச­யம் வெற்றி­பெ­றும் என்று நம்­பிக்­கை­யும் தெரி­வித்­தா­ராம்.

'மிரள்' என்ற தலைப்­பில் உரு­வாகி உள்ள இந்­தப் புதிய படத்­தில் ஸ்லா­ஷர் திரில்­லர் என்ற புது பாணியைப் பின்­பற்றி கதை சொல்லி இருக்­கி­றார் சக்­தி­வேல்.

"முதல் பாதி முழுக்க அடுக்­கடுக்­காக வந்து விழு­கிற முடிச்சு­கள். அடுத்த பாதி­யில் அவை ஒவ்­வொன்­றாக அவிழ்ந்து படம் பார்க்­கும் ரசி­கர்­க­ளுக்­குப் பல விஷ­யங்­களைப் புரியவைக்­கும். எனவே சுவா­ர­சி­யத்­துக்­குப் பஞ்­சம் இருக்­காது.

"வெறும் திகில் பட­மாக மட்­டும் அல்­லா­மல் பல­த­ரப்­பட்ட உணர்­வு­களை­யும் காட்­சிப்­படுத்த வேண்­டும் என விரும்­பி­னேன். பயம், திகில், இசை, வச­னம், விறு­வி­றுப்­பான திரைக்­கதை, கதா­பாத்­தி­ரங்­க­ளின் தனித்­தனி உணர்­வு­கள் எனப் பல விஷ­யங்­கள் குறை­வின்றி இருக்கும்.

"இந்த அம்­சம்­தான் 'மிரள்' படத்தை மற்ற படங்­களில் இருந்து வேறுபடுத்திக்காட்­டும்," என்று படபடவெனப் பேசு­கி­றார் சக்­தி­வேல்.

தமது படம் வெற்­றி­பெற வேண்­டுமே என்ற தவிப்பு இருந்­தா­லும், தர­மான படத்தை உரு­வாக்­கி­ய­தால் ஏற்­ப­டக்­கூ­டிய துணிச்­சல் ரேகை­யை­யும் அவ­ரது முகத்­தில் பார்க்க முடி­கிறது.

"கதை நாய­கன் பரத், மிக­வும் பாந்­த­மான குடும்­பத் தலை­வ­ராக வரு­கி­றார். ஒரு குடும்­பத்­தில் உள்ள உள­வி­யல் சார்ந்த விஷ­யங்­களை விரி­வாக அல­சி­யுள்­ளோம்.

"பரத்­ தான் இந்­தக் கதை­யில் முத­லில் ஈர்ப்­பாகி திரைப்­ப­ட­மாக்­கு­வ­தற்­கான முழு முயற்­சி­யில் இறங்­கி­னார். ஒரு பய­ணத்­தில் நடக்கும் திகி­லான அம்­சங்­க­ளால் திகைத்து, அதைச் சமா­ளித்து வெளி­வ­ரும் இடங்­களில் எல்­லாம் அரு­மை­யாக நடித்­துள்­ளார்.

"பரத்­துக்கு இணை­யாக வாணி போஜ­னும் மிகத் திற­மை­யாக நடித்­தி­ருக்­கி­றார்.

"படத்தை எந்த முறை­யில் கொண்டு செல்ல வேண்­டும் என்­ப­தில் நான் சம­ர­சத்­திற்கு உள்­ளா­க­வில்லை. அதற்கு பரத்­தும் தயா­ரிப்­பா­ள­ரும் துணை­யாக இருந்­த­து­தான் கவ­னிக்க வேண்­டிய விஷ­யம்.

"படத்தை இரு­பது நாள்­களில் முடித்­து­விட்­டேன். 35 அடி காற்­றாலை போன்று அமைக்­கப்­பட்ட அரங்­கில் பரத் ஏறி நடித்­ததே திகி­லான விஷ­யம்­தான். உயி­ரோட்­ட­முள்ள கதைக்­காக அவர் கடு­மை­யாக உழைத்­துள்­ளார்," என்கிறார் இயக்குநர் சக்திவேல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!