‘நான் ஒப்பனைப் பிரியை’

தாம் ஒரு புத்­த­கப் புழு என்­றும் நேரம் கிடைத்­தால் உட­ன­டி­யாக புதுப் புத்­த­கத்தை தேடிப்­பி­டித்து வாசிக்­கத் தொடங்­கி­வி­டு­வது தமது பழக்­கம் என்­றும் சொல்­கி­றார் சம்­யுக்தா மேனன்.

இவ­ரைப் பற்றி தமிழ் சினிமா ரசி­கர்­க­ளுக்கு அறிமுகப்­படுத்த வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

மலை­யா­ளப் படங்­களில் நடித்து வரு­ப­வர், கடந்த 2018ஆம் ஆண்­டி­லேயே தமி­ழில் 'களரி' படத்­தில் நடித்­தி­ருந்­தார். அதன் பிறகு 'ஜூலை காற்­றில்' படத்தில் நடித்த நிலை­யில், எதிர்­பார்த்த வாய்ப்­பு­கள் அமை­யாத கார­ணத்­தால் தமி­ழில் இருந்து ஒதுங்கி மற்ற மொழி­க­ளுக்கு முன்­னு­ரிமை அளித்­தார்.

"நான் பிறந்து வளர்ந்­தது எல்­லாம் கேர­ளா­வில்­தான். அங்கு பாலக்­காட்டு பகு­தி­யில் உள்ள பள்­ளி­யில்­தான் படித்­தேன். பின்­னர் அங்­கி­ருந்­த­ப­டியே பொரு­ளி­யல் படிப்­பில் பட்டப்­ப­டிப்பை மேற்கொண்­டேன்.

"நல்ல புத்­த­கங்­க­ளைத் தேடிப் பிடித்­துப் படிக்­கும் வழக்­கம் சிறு வயது முதலே உள்­ளது. அதே­போல் நான் எதிர்­பார்க்­கும் புத்­த­கங்­கள் கிடைக்­கா­த­போது பய­ணங்­கள் மேற்­கொள்­வேன்.

"நல்ல, அழ­கான ஒப்­ப­னை­யு­டன் வலம் வரு­வது எனக்கு மிக­வும் பிடிக்­கும். ஓர­ளவு ஒப்­ப­னைப் பிரியை என்று என்­னைக் குறிப்­பி­ட­லாம்," எனச் சொல்­லும் சம்­யுத்தா, தமது சமூக ஊட­கப் பக்­கங்­களில் தவ­றா­மல் அடிக்­கடி ஒப்­ப­னைக் குறிப்­பு­களை வெளி­யி­டு­கி­றார்.

செல்­லப் பிரா­ணி­கள் மீது மிகுந்த அன்பு வைத்­துள்­ளார் சம்­யுக்தா. அனை­வ­ரும் விலங்­கு­களை நேசிக்க வேண்­டும் என்று அறி­வு­ரை­யும் தரு­கி­றார்.

"வெள்ளை, கறுப்பு கலந்த நிறத்­தில் செல்ல நாய்க்­குட்டி ஒன்றை வளர்க்­கி­றேன். நான் எங்கு சென்­றா­லும் என்­னைச் சுற்­றிச்­சுற்றி வரும். 'நோவா' என்று பெயர் சூட்­டி­உள்­ளேன். வெளிப்­புற படப்­பி­டிப்பு முடிந்து வீடு திரும்­பி­யவுடன் என்னை முத­லில் வர­வேற்­பது நோவா­தான். அந்த வகை­யில் என் குடும்­பத்­தா­ருக்கே நோவா மீது கோபம் உண்டு.

"சமூக ஊட­கங்­களில் வெளி­யா­கும் எனது புகைப்­ப­டங்­க­ளுக்கு நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது. ஏரா­ள­மா­னோர் அந்­தப் படங்­கள் பிடித்­தி­ருப்­ப­தா­கப் பின்­னூட்­டம் இட்­டுள்­ள­னர்.

"கூடவே எனது அழ­கின் ரக­சி­யம் என்­ன­வென்று கேட்­டும் பலர் தனி­யா­கப் பதி­விட்­டுள்­ள­னர். பள்ளி, கல்­லூரி காலங்­களில் நானும் உடல் பெருத்­து­தான் இருந்­தேன்.

"பிறகு திட்­ட­மிட்டு உடற்­ப­யிற்சி மேற்­கொண்­ட­தன் பல­னாக இப்போது ரசி­கர்­க­ளின் மனம் கவர்ந்த நாய­கி­யா­க­வும் நல்ல உடற்­கட்­டு­ட­னும் வலம்­வர முடி­கிறது," என்று சொல்­லும் சம்­யுக்தா, படப்­பி­டிப்பு இருந்­தா­லும்­கூட தின­மும் ஓரிரு மணி நேரத்தை உடற்­ப­யிற்­சிக் கூடத்­தில் செல­வி­டு­கி­றார்.

மேலும், உண­வுக்­கட்­டுப்­பாட்­டை­யும் முறை­யா­கப் பின்­பற்­று­கி­றார். அள­வோடு சாப்­பிட்டு, உரிய உடற்­ப­யிற்­சி­யும் மேற்­கொண்­டால் எந்­த­வி­த­மான நோய்­களும் அண்­டாது என உறு­தி­யாக நம்­பு­கி­றா­ராம்.

தற்­போது 'வாத்தி' படத்­தில் தனு­ஷுக்கு ஜோடி­யாக நடித்து வரும் சம்­யுக்­தாவை சமூக ஊட­கங்­களில் பல மில்­லி­யன் பேர் பின்­தொ­டர்­கி­றார்­கள்.

இந்த எண்­ணிக்­கை­யும் ரசி­கர்­கள் தம் மீது வைத்­துள்ள நிபந்­த­னை­யற்ற அன்­பும் தம்மை வியக்­க­வும் நெகி­ழ­வும் வைப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

மலை­யா­ளத்­தில் துல்­கர் சல்­மா­னு­டன் 'ஒரு யாமந்­தன் பிரே­மக் கதா' படத்­தில் நடித்­துள்ள சம்­யுக்தா, அங்கு, 'உயரே', 'கல்கி', 'எடக்­காட் படா­லி­யன் 06', 'அண்­டர் வோர்ல்ட்' என அடுத்­த­டுத்து பல படங்­களில் நடித்து முடித்­துள்­ளார்.

மலையாளத் திரையுலகம் தமக்கு உரிய முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­ப­டு­வ­தா­கவும் சொல்­கி­றார்.

"எனி­னும் தமிழ் ரசி­கர்­க­ளின் மன­தைக் கவர வேண்­டும் என்­ப­து­தான் எனது இலக்கு. அதை அடை­யும் வகை­யில் இப்­போது தனு­ஷு­டன் நடிக்­கும் வாய்ப்பு கிடைத்­துள்­ளது.

"எனக்கு 27 வயதுதான் ஆகிறது. சினி­மா­வில் சாதிக்க போது­மான கால அவ­கா­சம் உள்­ளது. எனவே எனது இலக்­கு­களை நிச்­ச­யம் அடை­வேன்," என்­கி­றார் சம்யுக்தா மேனன்.

'வாரிசு' படத்­தில் நடிக்க ஒப்­பந்­த­மான கையோடு தெலுங்­கில் இரண்டு புதுப்­ப­டங்­களில் இவரை ஒப்­பந்­தம் செய்­துள்­ள­தாகத் தகவல்.

மேலும், சம்­யுக்­தா­வின் சம்­ப­ள­மும் அதி­க­ரித்­துள்­ளது. எனவே 'வாரிசு' வெற்றிபெறும் பட்­சத்­தில் தெலுங்­கில் தமது மதிப்பு கூடும் என்று மிகுந்த நம்­பிக்­கை­யு­டன் காத்­தி­ருக்­கி­றார் சம்­யுக்தா.

சமூக ஊட­கங்­களில் இயங்கி வரு­கி­றார் என்­றா­லும், தமது கருத்­து­களை வெளிப்­ப­டுத்­து­வ­தில் கவ­ன­மாக உள்­ளா­ராம். அனை­வ­ரும் பொறுப்­பு­டன் செயல்­பட வேண்­டும் என்­றும் அக்கறையுடன் அறிவுறுத்­து­கி­றார் இளம் நாயகி சம்யுக்தா.

சம்யுக்தா மேனன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!