திரைத்துளி­கள்

 ரசிகர்களைச் சந்திக்கும் போது தாம் காலணிகள் அணிவதில்லை என்று மூத்த நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். ஏனென்றால் ரசிகர்களைச் சந்திக்கும்போது தாம் ஒரு பக்தனாக மாறி விடுவதாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள் ளார். "என்னைப் பொறுத்த வரை பக்தர்களுடனான சந்திப்பு நிகழ்வை ஓர் ஆன்மிக நிகழ்ச்சியாகக் கருதுகிறேன். என்னை வாழவைக்கும் தெய்வங்களாகவே அவர்களைப் மதிக்கிறேன். ரசிகர்கள் இல்லாவிட்டால் நான் இல்லை. எண்பது வயதிலும்கூட என்னை ரசிக்கும் ரசிகர்களுக்கு நான் செய்யும் சிறிய மரியாதை இது," என்கிறார் அமிதாப்.

 நீண்ட இடைவெளிக்குப் பின் தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்கிறார் அனுஷ்கா. அவரது பிறந்தநாளை முன்னிட்டு அந்தப் புதிய படத்தின் சுவரொட்டியை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. மகேஷ் இயக்கத்தில் உருவாகும் அப்படத்தில் அன்விதா ரவளி ஷெட்டி என்ற சமையல் கலைஞர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அனுஷ்கா. இது அவரது 48வது படமாகும்.

 '''உண்மையில் காதல் என் றால் என்னவென்று தெரியாது. ஆனால், எது காதல் இல்லை என்று என்னால் சொல்ல முடியும்," என்கிறார் ரகுல் பிரீத் சிங். பாதுகாப்பற்ற முறையில் அல்லது பிறரை சார்ந்திருப்பது காதல் இல்லை என்றும் பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள் ளார். "ஒருவரையொருவர் மதிப்பதும், அவரவர் பயணத்தை அவரவர் தொடர முழு சுதந்திரம் அளிப்பதும் காதலின் ஒரு பகுதி," என்கிறார் ரகுல். இவர் இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியைக் காதலிக்கிறார்.

 தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா, அண்மையில் கண்ணீர் மல்க அளித்துள்ள காணொளிப் பேட்டி ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தி உள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் தம்மால் ஓரடி கூட நடக்க முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

"தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறேன். கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும் போது, எனக்கே நான் சாதித்துள்ளவை குறித்து வியப்பு ஏற் படுகிறது. ஒரு விஷயத்தை தெளிவாக சொல்ல விரும்புகி றேன். எனது உடல்நிலை உயிருக்கே ஆபத்தான நிலையில் உள்ளதாக சில செய்திகளைப் பார்த்தேன். ஆனால், நான் அப்படிப்பட்ட நிலையில் இல்லை. இந்த கணம் வரையிலும் நான் சாகாமல் தான் இருக்கிறேன். சூழ்நிலை கடினமானதாக இருப்பினும், அதை எதிர்த்துப் போராடுவேன்," என்கிறார் சமந்தா.

 'டிரைவர் ஜமுனா' படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், தமக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து விவரித்தார்.

கல்லூரியில் படிக்கும்போது தோழி வீட்டிற்குச் சென்றுவிட்டு ஷேர் ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாராம். அப்போது பக்கத்தில் அமர்ந்திருந்த ஒருவர் மெல்ல அத்துமீற முயன்றுள்ளார்.

"அவர் என் மீது கை வைத்தார். அப்போது பத்மா ('வடசென்னை' படத்தில் நடித்த கதாபாத்திரம்) வந்துவிட்டாள். உடனே ஆட்டோவை நிறுத்தச் சொல்லி, ஓட்டுநரிடம் அந்தப் பயணி நடந்துகொண்ட விதம் குறித்து கூறினேன். அண்ணா... ஏன் இதுபோன்ற வாடிக்கையாளர்களை வண்டி யில் ஏற்றுகிறீர்கள். அவரால் உங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்றேன். அவர் மிகவும் வருந்தினார்," என்கிறார் ஐஸ்வர்யா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!