‘அண்மைய மாற்றங்கள் மகிழ்ச்சி தருகின்றன’

வெற்றி மாறன் தயா­ரிப்­பில் உரு­வாகி உள்ளது 'அனல் மேலே பனித்­துளி' திரைப்படம். கெய்­சர் ஆனந்த் இயக்­கி­யுள்ள இப்­படத்­தில் ஆண்ட்­ரியா நாய­கி­யாக நடித்­துள்­ளார்.

எதிர்­வ­ரும் 18ஆம் தேதி முன்­னணி ஓடிடி தளத்­தில் வெளி­யா­கிறது இப்­படம். காலஞ்­சென்ற கவி­ஞர் கண்­ண­தா­ச­னின் பேரன் ஆதவ்தான் நாயகன்.

அவர் கேட்­டுக்­கொண்­ட­தால்­தான் இந்­தப் படத்­தில் நடிக்க தாம் முதலில் ஒப்­புக்­கொண்­ட­தா­கச் சொல்­கி­றார் ஆண்ட்­ரியா.

"ஆதவ் என் நண்­பர். அவர்­தான் இந்­தக் கதை­யைக் கேட்­கச் சொன்­னார். ஓர் இளம் பெண்ணை மையப்­ப­டுத்தி பின்­னப்­பட்­டுள்ள கதை. முதன் முறை­யாக இயக்கு­நர் கதையை விவ­ரித்­த­போது என்னை­யும் அறி­யா­மல் அதில் மூழ்­கிப்­போ­னேன். எனது கதா­பாத்­தி­ரத்­தின் பெயர் மதி. கதைப்­படி சிறு நக­ரம் ஒன்­றில் பிறந்து அமை­தி­யாக வாழ்ந்து கொண்­டி­ருப்­பாள்.

"பின்­னர் ஒரு கட்­டத்­தில் மனம் நிறைந்த கன­வு­க­ளு­டன் சென்­னைக்கு வரும் மதி­யின் வாழ்க்­கை­யில் எதிர்­பா­ராத சம்­ப­வங்­கள் நிகழ்­கின்­றன. குறிப்­பாக ஒரு பாலி­யல் வன்­கொ­டு­மைச் சம்­ப­வத்­துக்­குப் பிறகு அவள் மனப்­போ­ராட்­டத்­துக்கு ஆட்­படு­கி­றாள்.

"அந்­தச் சம்­ப­வத்­தால் அவர் முடங்கிப்போகிறாளா, அல்­லது மீண்டு வரு­கிறாளா என்­ப­து­தான் கதை. பெரும் சிக்­க­லில் இருந்து மீள ஓர் இளம் பெண் மேற்­கொள்­ளும் நட­வடிக்­கை­கள் எப்­ப­டிப்­பட்­ட­தாக இருக்­கும் என்­பதை இயக்­கு­நர் கெய்­சர் ஆனந்த் அழ­கா­க­வும் யதார்த்­தத்தை மீறாத வகை­யிலும் பட­மாக்கி உள்­ளார்.

"ஆதவ் உட­னான நட்­பு­தான் கதை கேட்க வைத்­தது என்­றா­லும், முழு­மை­யாக கேட்­ட­றிந்த பின்­னர், தர­மான கதை என மன­தில் தோன்­றி­யது. எனவே ஆதவ் பரிந்­து­ரைத்த கதை என்­பதையும் மீறி, அதன் தரம் கார­ண­மா­கவே இப்­ப­டத்­தில் நடிக்­கி­றேன்," என்­கி­றார் ஆண்ட்ரியா.

இது உண்­மைக் ­க­தையை அடிப்­படை­யா­கக் கொண்டு உரு­வா­கும் படம் என்­பதை மறுப்­ப­வர், நுணுக்­க­மான அம்­சங்­க­ளைக் கொண்ட படம் என்­ப­தால் இயக்கு­நர் ஒவ்­வொரு காட்­சி­யை­யும் மிகுந்த கவ­னத்­து­டன் கையாண்­டி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"இது ஒரு­வ­கை­யில் சீரி­ய­ஸான படம் என்­பேன். இது­போன்ற கதைக்­க­ளங்­க­ளைக் கவ­ன­மா­கக் காட்­சிப்­ப­டுத்த வேண்­டும் என்று இயக்­கு­ந­ரும் தயா­ரிப்­பா­ள­ரு­மான வெற்­றி­மா­றன் அடிக்­கடி சொல்­வார்.

"கார­ணம் சிறு தவறு நிகழ்ந்தாலும் தவ­றான கருத்து ரசி­கர்­க­ளைச் சென்­ற­டைந்­து­வி­டும் என்­பார் வெற்­றி­மா­றன். அவ­ரது அறி­வுரை­யை­யும் மன­தில் வைத்­து­த்தான் இந்­தப் படம் உரு­வாகி உள்­ளது.

"திரை­ய­ரங்­கு­களில் வெளி­யிட வேண்­டும் என்ற திட்­டத்­து­டன்­தான் கடந்த 2020ஆம் ஆண்டு பட வேலை­க­ளைத் தொட­ங்கி­னோம்.

"ஆனால் கொரோ­னா­வின் கோரத்தாண்­ட­வம் எல்லா திட்­டங்­க­ளை­யும் புரட்­டிப்போட்டு­விட்­டது. அத­னால் இப்போது ஓடிடி தளத்­தில் வெளி­யாகிறது," என்­கி­றார் ஆண்ட்­ரியா.

அண்­மைக்­கா­ல­மாக நாய­கி­களை மையப்­ப­டுத்­தும் கதைக்­களங்­க­ளு­டன் வெளி­யா­கும் படங் க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், இது போன்ற அண்மைய மாற்றங்கள் தமக்கு மகிழ்ச்சி அளிப்­ப­தா­கச் சொல்­கி­றார். இது­போன்ற மாற்­றங்­கள் திரை­யு­ல­கில் வளர்ச்­சிக்­குக் கைகொ­டுக்­கும் என்­பதே தமது கருத்து என்­கி­றார்.

"கதா­நா­ய­கி­க­ளுக்­கும் முக்­கி­யத்­து­வம் அளிக்­கும்­போது மாறு­பட்ட கதைக்­க­ளங்­கள் கிடைக்­கின்­றன. இத­னால் ரசி­கர்­கள் மத்­தி­யில் எதிர்­பார்ப்­பு­கள் அதி­க­ரிக்­கும். இது படத்­தின் வியா­பா­ரத்­துக்­குக் கைகொ­டுக்­கும்.

"வித்­தி­யா­ச­மான கதைக்­க­ளங்­கள் அமை­யும்­போது நிறைய திற­மை­சா­லி­களை அடை­யா­ளம் காணும் வாய்ப்­பும் கிடைக்­கிறது. தவிர, நாய­கி­களை நம்­பி­யும் இப்­போது பணத்தை முத­லீடு செய்­கி­றார்­கள்," என்­கி­றார் ஆண்ட்­ரியா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!