சிம்பு: இதுதான் தமிழ் சினிமாவின் பொற்காலம்

அண்­மை­யில் வெளி­யீடு கண்ட தமிழ்த் திரைப்­ப­டங்­கள் பல­வும் வசூல் ரீதி­யில் வெற்றி பெற்­றி­ருப்­பது மகிழ்ச்சி அளிப்­ப­தா­கச் சொல்­கி­றார் நடி­கர் சிம்பு.

இது தமிழ் சினி­மா­வின் பொற்­கா­லம் என்­றும் அவர் சென்­னை­யில் நடை­பெற்ற 'வெந்து தணிந்தது காடு' படத்­தின் வெற்றி விழா­வில் பேசும்­போது குறிப்­பிட்­டார்.

"அண்­மை­யில் வெளி­வந்த அனைத்துப் படங்­களும் நல்ல வர­வேற்­பைப் பெற்­றுள்­ளன. 'விக்­ரம்' தொடங்கி 'பொன்­னி­யின் செல்வன்', கன்­னட திரைப்­ப­ட­மான 'காந்­தாரா', 'லவ் டுடே' வரை பல படங்­க­ளுக்கு நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

"இயக்­கு­நர்­க­ளுக்­கும் நல்ல, வித்­தி­யா­ச­மான திரைப்­ப­டங்­கள் எடுக்க வேண்­டும் என்ற கனவு இருக்­கும். அவர்­க­ளின் அந்­தக் கனவை நிறை­வேற்றக்கூடிய நல்ல கால­கட்­டம் இப்­போது தமிழ் சினி­மா­வில் நிலவி வரு­கிறது. திரை­உ­ல­கத்­தி­னர் இந்த வாய்ப்பை நன்கு பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும். மக்­கள் வித­வி­த­மான திரைப்­ப­டங்­களை ரசிக்­கத் தொடங்­கி­விட்டார்கள்," என்­றார் சிம்பு.

'வெந்து தணிந்­தது காடு' படம் வெளி­யா­கும் முன்பு அது வெற்றி பெறுமா என்ற சந்­தே­கம் எழுந்­த­தா­க­வும் அத­னால் ஒரு­வித பயத்­து­டன் இருந்­த­தா­க­வும் குறிப்­பிட்ட அவர், நாய­கனை மட்­டுமே முன்னிலைப்­ப­டுத்­தும் வழக்­க­மான படமாக அது உரு­வா­க­வில்லை என்றார்.

"மக்­கள் வித்­தி­யா­ச­மான கதை­களை ரசிக்கத் தொடங்­கி­யி­ருப்­ப­தால், அந்த ரசனை என் பயத்தைப் போக்கி படத்தை வெற்­றி­பெற வைத்­துள்­ளது," என்­றார் சிம்பு.

கௌதம் மேனன் இயக்­கத்­தில் சிம்பு நடித்த 'வெந்து தணிந்­தது காடு' கடந்த செப்­டம்­பர் 15ஆம் தேதி திரை­ய­ரங்­கு­களில் வெளி­வந்­தது. இப்­ப­டத்­திற்கு ஏ.ஆர்.ரஹ்­மான் இசை­ய­மைத்­தி­ருந்­தார். சித்தி இதானி படத்­தில் நாய­கி­யாக நடித்­தி­ருந்­தார்.

படம் வெளி­யாகி கல­வை­யான விமர்­ச­னங்­க­ளைப் பெற்ற நிலையில், இப்­போது ஓடிடி தளத்­தில் வெளி­யாகி நல்ல வர­வேற்­பைப் பெற்­றுள்­ளது.

இந்­தப் படம் முப்­பது கோடி ரூபா­யில் உரு­வாகி, சுமார் அறு­பது கோடி ரூபாய் வசூல் கண்­டுள்­ளது. இதை­ய­டுத்து அந்­தப் படம் வெளியாகி ஐம்­பது நாள்­க­ளைக் கடந்ததைக் கொண்­டா­டும் நிகழ்வு சென்­னை­யில் நடை­பெற்­றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!