கண்ணீர் ஆனந்தக் கண்ணீரானது

தசை அழற்சி நோயால் பாதிக்­கப்

பட்­டுள்ள சமந்தா தான் நடித்த 'யசோதா' படத்­தின் விளம்­ப­ர­தா­ரர் நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­ட­போது கண் கலங்கி அழுதது ஒட்­டு­மொத்த ரசி­கர்­க­ளை­யும் துடி­து­டிக்க வைத்­தது. தனித்து நிற்­கும் உங்­க­ளுக்கு பக்­க­ப­ல­மாக நாங்­கள் இருப்­போம் என்று காட்­டும் வகை­யில் முதல்­நாள் முதல் காட்­சிக்கு விரைந்த ரசி­கர்­கள், படத்­தில் அவ­ரின் நடிப்­பைப் பாராட்டி போட்ட வாழ்த்­து­க­ளைப் பார்த்து கலங்­கிப்­போய் நின்ற சமந்தா தற்­பொ­ழுது ஆனந்­தக் கண்­ணீர் வடித்து நன்றி தெரி­வித்து வருகிறார்.

நடிகை மீனா­வின் கண­வர் இறந்­த­போது அவ­ருக்கு உறு­து­ணை­யாக நின்ற தோழி­க­ளைப்­போல சமந்­தா­விற்கு ஒரு தோழி­கூட திரை­யு­ல­கில் இல்­லையா? முன்­னணி நடி­கை­கள்­கூட அவ­ருக்கு ஆறு­தல் கூற­வில்­லையே என்று குற்­றம்சாட்­டிய ரசி­கர்­கள், நாங்­கள் இருக்­கி­றோம் சமந்தா என்று செயல்­ப­டத் தொடங்­கி­னர்.

முத­லா­வ­தாக தென்­னை­மர

உய­ரத்­திற்கு சமந்­தா­வின் உருவப் படங்­களை விஜ­ய­ந­க­ரம், விஜ­ய­வாடா, விசா­கப்­பட்­டி­னம், ராஜ­முந்­திரி,

காக்­கி­நாடா, நந்­தி­யால் உள்­ளிட்ட பல ஊர்­களில் இருக்­கும் திரை

­ய­ரங்­கு­க­ளின் முன் அலங்­க­ரித்து, மாலை அணி­வித்­த­னர்.

நேற்று முதல் நாள் முதல் காட்­சிக்கு அவ­ரு­டைய ரசி­கர்­கள் திரை

­அரங்­கு­களை நோக்­கித் திரண்­ட­னர். ஹரி சங்­கர், ஹரீஷ் நாரா­ய­ணன் இணைந்து இயக்கி இருந்த இந்­தப் படத்­தில் சமந்தா முதன்­மைக் கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­தி­ருந்­தார். அவ­ரு­டன் வர­லட்சுமி சரத்­கு­மார், உன்னி முகுந்­தன், ராவ் ரமேஷ் உள்­ளிட்ட பலர் நடித்­தி­ருந்­த­னர்.

'ஓ பேபி', 'யூ டர்ன்' படங்­களைப் போல சமந்தா இந்­தப் படத்­திலும் சிறப்­பாக நடித்­திருக்கிறார். திரைப்­ப­ட­மும் மிகப்­பெ­ரிய அள­வில் வெற்றி பெற்­றி­ருக்­கிறது.

"படம் எங்­கும் தொய்வு இல்­லா­மல் பயங்­கர திருப்­பங்­க­ளு­டனும் சண்­டை­கள் நிறைந்­த­தா­க­வும் மக்­க­ளுக்­குத் தேவை­யான செய்­தி­

க­ளைக் கொண்ட பட­மா­க­வும் இருக்­கிறது," என்று ரசி­கர்­கள் பதி­விட்டு வரு­கி­றார்­கள்.

மேலும், "சமந்­தா­விற்கு ஈடு­கொ­டுத்து நடித்த மற்ற நடி­கர்­

க­ளின் நடிப்­பும் பின்­னணி இசை­யும் பிர­மா­த­மாக அமைந்­தி­ருக்­கிறது. படத்­தில் பாடல்­கள் இல்­லா­தது மிகப்­பெ­ரிய பக்கபல­மாக இருக்­கிறது. படத்­திற்கு 4 'ஸ்டார்' தர­லாம்," என்று பல­ரும் பதி­விட்டு வரு­கி­றார்­கள்.

அந்­தப் பதி­வு­க­ளைப் பார்த்த சமந்தா, "ஆனந்­தக் கண்­ணீ­ரு­டன் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்," என்று பதி­விட்டு வரு­கி­றார்.

'காத்­து­வாக்­குல ரெண்டு காதல்' படத்தில் சமந்­தா­வு­டன் நடித்த சக நடிகை நயன்­தாரா, 'நடி­கை­யர் தில­கம்', 'சீம­ராஜா' உள்­ளிட்ட படங்­களில் சமந்­தா­வு­டன் நடித்­தி­ருந்த கீர்த்தி சுரேஷ், 'புஷ்பா' படத்­தின் பாட­லால் வெற்­றிப்­பட நாய­கி­யாக வலம் வரும் ராஷ்­மிகா மந்­தனா ஆகி­யோர் சமந்­தா­வின் உடல்நிலை குறித்­தும் அவ­ரு­டைய படம் வெற்­றி­

ய­டைய வேண்­டும் என்றும் ஒரு வாழ்த்துகூட பதிவிடவில்லை.

ஆனால், சமந்தாவுடன் நடிக்காத ஐஸ்­வர்யா ராஜேஷ், நேற்று வெளி­யாக இருந்த தன்­னு­டைய 'டிரை­வர் ஜமுனா' படத்­தைத் தள்ளிவைத்து, "சமந்தா, உங்­க­ளு­டைய 'யசோதா' படம் வெற்­றி­ய­டைய வாழ்த்­து­கள். உங்­கள் படம் வெற்­றி­ய­டைய என்­னு­டைய படத்­தின் வெளி­யீட்­டைத் தள்ளிவைத்து இருக்­கி­றேன்," என்று டுவிட்­ட­ரில் பதி­விட்டு இருப்­பது பல­ரை­யும் மகிழ்ச்­சி­யில் ஆழ்த்தி இருக்­கிறது.

உலகம் முழுவதும் சமந்தா நடித்த 'யசோதா' படம் வெளியாகி வெற்றி நடைபோடுகிறது

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!