கனவுப் படத்தைக் கையிலெடுத்த கமல்

கமல்ஹாசனின் கன­வுப் படம் 'மரு­த­நா­ய­கம்'. அந்தப் படத்தைத் தானே இயக்கி நடிக்க வேண்டும் என்பது இவ­ரு­டைய நீண்ட நாள் கனவு. கம­லின் கனவு கன­வா­கவே போய்­

வி­டும் என்ற நிலை­யில் தற்­பொ­ழுது மீண்­டும் அந்­தப் படத்தைக் கையில் எடுத்து இருக்­

கி­றார் கமல்­ஹா­சன்.

இவரது நடிப்­பில் அண்­மை­யில் வெளி­யான 'விக்­ரம்' திரைப்­ப­டம் ரசி­கர்­கள் மத்­தி­யில் நல்ல வர­வேற்பைப் பெற்­ற­தோடு வசூ­லி­லும் சாத­னை படைத்­தது. அத­னை­ய­டுத்து தனது 232வது பட­மான 'இந்­தி­யன் 2' என்ற திரைப்­ப­டத்­தில் சங்­கர் இயக்­கத்­தில் நடித்து வரு­கி­றார்.

அந்­தப் படத்­தைத் தொடர்ந்து தன்­னு­டைய பிறந்­த­நா­ளின்­போது தான் நடிக்க இருக்­கும் 234வது படத்தை இயக்­கு­நர் மணிரத்னம் இயக்­கப்­போ­வ­தாக அறி­வித்து இருந்­தார். கம­லின் 233வது படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற கேள்­விக்கு தற்­பொ­ழுது பதில் கிடைத்து இருக்­கிறது.

கமல் நடிப்­பில் லோகேஷ் கன­க­ராஜ் இயக்­கத்­தில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி திரை­

ய­ரங்­கு­களில் வெளி­யா­னது 'விக்­ரம்' படம். கமல், சூர்யா, விஜய் சேது­பதி, பகத் பாசில் என மிகப்­பெ­ரிய நடி­கர்­கள் கூட்­ட­ணி­யில் வெளி­யான இந்­தப்­ப­டம் வசூ­லில் சாத­னை படைத்­தது.

அதா­வது, இந்த ஆண்டு வெளி­யான படங்­களில் அதிக வசூல் செய்த படங்­க­ளின்

பட்­டி­ய­லில் அஜித்­தின் 'வலிமை' முதல் இடத்­தை­யும் 'கேஜிஎப் 2' படம் இரண்­டா­வது இடத்­தை­யும் பெற்­றுள்ள நிலை­யில், 'விக்­ரம்' படம் மூன்­றா­வது இடத்தைப் பெற்­றது.

இந்­நி­லை­யில், கம­லின் 233வது படத்தை எச். வினோத் இயக்­க­வுள்­ள­தாக தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன. அஜித் நடிக்­கும் 'துணிவு' படத்­தின் வேலை­கள் முடிந்­த­தும் எச்.வினோத் படத்­தைத் தொடங்­கு­வார் என்று கூறப்­ப­டு­கிறது. மேலும், 'விக்­ரம்' படத்­தின் வெற்­றிக்கு பிறகு கமல், விஜய் சேது­பதி கூட்­டணி மீண்­டும் இந்­தப் படத்­தில் இணை­ய­வுள்­ளது. படத்தை கம­லின் 'ராஜ் கமல் பிலிம்ஸ்'

நிறு­வ­னம் தயா­ரிக்­க­வுள்­ளது குறிப்­பி­டத்­

தக்­கது.

இதற்­கி­டை­யில், கமல் தன்­னு­டைய கனவு பட­மான 'மரு­த­நா­ய­கம்' படத்தை மீண்­டும் தூசி தட்டி எடுத்து இருக்­கி­றார்.

ஏற்­கெ­னவே பட விழா ஒன்­றில் மரு­த­நா­ய­கம் கண்­டிப்­பாக திரைக்கு வரும் என்று கமல் கூறி இருந்­தார். பல ஆண்­டு­க­ளுக்கு முன்­பா­கவே 'மரு­த­நா­ய­கம்' படம் தொடங்­கிய போதும், கிட்­டத்­தட்ட 35 விழுக்­காடு படப்­பி­டிப்பு நிறை­வ­டைந்த நிலை­யில் சில பிரச்சினைகளால் படப்­பி­டிப்பு பாதி­யி­லேயே நிறுத்­தப்­பட்­டது.

இந்­நி­லை­யில், 'மரு­த­நா­ய­கம்' திரைப்­ப­டத்தை கமல் பொறுப்­பேற்று இயக்க இருப்­ப­தா­க­வும் ஆனால், படத்­தில் அவர் நடிக்கமாட்­டார் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

கமல்­ஹா­ச­னுக்கு

பதி­லாக நடி­கர் சூர்யா

அல்­லது

விக்­ரமை வைத்து 'மரு­த­நா­ய­கம்' படத்தை எடுப்­ப­தற்குத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.

படத்­தில் கமல்­ஹா­சனே நடிக்­க­வேண்­டும், அவர் நடிப்பில்தான் 'மருத நாயகம்' படத்தைப் பார்க்க விரும்புவதாக ரசிகர்கள் பதி­விட்டு வரு­கி­றார்­கள்.

'மரு­த­நா­ய­கம்' படத்­தின் பூசையின்­போது காலஞ்சென்ற இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் அரசியார்

கலந்­து­கொண்­டார் என்­பது குறிப்பி­டத்­தக்­கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!