சிக்கலில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகாவிடம் 'காந்தாரா' படம் குறித்து கேள்வி எழுப்பியபோது அந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை என்று பதில் அளித்தார். அதனால் கோபமடைந்த கன்னட ரசிகர்கள் வலைத் தளங்களில் மோசமான வார்த்தைகளால் வசைபாடியும் விமர்சித்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

தமிழில் கார்த்தியுடன் 'சுல்தான்' படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா, தற்பொழுது விஜய் ஜோடியாக 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். 'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற 'சாமி சாமி' பாடல் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்றார்.

கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடித்து இயக்கிய 'காந்தாரா' படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியாகி வெற்றி பெற்றது. இந்தப் படத்தைப் பார்த்த ரஜினிகாந்தும் இயக்குநரை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

ராஷ்மிகாவை ரிஷப் ஷெட்டிதான் 2017ல் 'கிர்ரிக் பார்ட்டி' என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார். ராஷ்மிகாவிடம் 'காந்தாரா' படம் குறித்து கேள்வி எழுப்பியபோது, "அந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை," என்று பதிலளித்தார்.

பலர் இந்தப் படத்தைப் பார்த்து பாராட்டி வரும் நிலையில் தன்னுடைய தாய்மொழியான கன்னடத்தில் வெளிவந்த 'காந்தாரா' படத்தை இன்னும் பார்க்கவில்லை என்று அவர் அலட்சியமாக பதில் அளித்தது கன்னட ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. வளர்த்துவிட்டவரை மறந்துவிட்டார் என்று ராஷ்மிகாவை சமூக ஊடகங்களில் மோசமான

வார்த்தைகளால் வசை பாடியும் விமர்சித்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவருக்கும் தெலுங்கு நடிகர் விஜய் தேவர கொண்டாவுக்கும் காதல் என்றும் தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!