‘சிறு தவறுகளைச் செய்துவிட்டார் விமல்’

ரஜினி நடித்த படங்­க­ளின் தலைப்பை புதுப் படைப்­பு­க­ளுக்கு வைத்­தால் அவை­யும் மிகப்­பெ­ரிய வெற்­றி­யைப் பெறும் என்று இயக்­கு­நர் லிங்­கு­சாமி கூறி­யுள்­ளார்.

விமல் நாய­க­னாக நடிக்­கும் ‘துடிக்­கும் கரங்­கள்’ படத்­தின் குறு முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்பு அண்­மை­யில் வெளி­யா­னது.

இந்­நி­கழ்­வில் கலந்­து­கொண்டு பேசிய இயக்­கு­நர் லிங்­கு­சாமி, விமல் மிக இயல்­பாக நடிக்­கக்­கூடிய நாய­கன் என்­றும் இன்று சிவ­கார்த்தி­கே­யன் உள்ள இடத்­துக்கு விமல் வந்­தி­ருக்க வேண்­டும் என்­றும் குறிப்­பிட்­டார்.

“ரஜினி நடித்த படத்­தின் தலைப்பை இந்­தப் படத்­திற்கு வைத்­துள்­ள­னர். ரஜினி படங்­களில் கொஞ்­சம் சுமா­ராக ஓடிய படங்­களின் தலைப்பை மீண்­டும் பயன்­படுத்­தும்­போது மிகப்­பெ­ரிய வெற்றி கிடைக்­கிறது. அதற்கு ‘நான் மகான் அல்ல’ படத்­தைக் குறிப்­பி­ட­லாம். அது­போன்ற ஒரு வெற்­றியை இந்தப் ­ப­ட­மும் நிச்­ச­யம் பெறும்.

“நடி­கர் விமல் ‘கேடி பில்லா கில்­லாடி ரங்கா’, ‘மஞ்­சப்பை’ என நல்ல படங்­களில் நடித்­துள்­ள­வர். சிவ­கார்த்­தி­கே­யன் போன்று விமலும் தனக்­கு­ரிய பெரிய இடத்தை இந்­நே­ரம் அடைந்­தி­ருக்க வேண்­டும்.

“இடை­யில் ஏதோ சில தவ­று­களால் அதில் கொஞ்­சம் தடை ஏற்­பட்­டு­விட்­டது. இப்­போது சின்னப் படங்­கள் என்று வகைப்­ப­டுத்­தப்­படும் ‘லவ் ­டுடே’ போன்ற படைப்பு­கள் படம் வெளி­யான பின்­னர் ரசி­கர்­கள் ஆத­ர­வு­டன் வெற்­றி­பெற்று பெரிய பட­மாக மாறு­கின்­றன.

“இந்­தப் படத்­தின் முன்­னோட்டக் காட்­சித் தொகுப்பை பார்த்­த­போது சலிப்பு ஏற்­ப­ட­வில்லை. மாறாக, உற்­சா­க­மாக இருந்­தது. எனவே இப்படம் மிகப்­பெ­ரிய வெற்றிபெறும்,” என்­றார் இயக்­கு­நர் லிங்­கு­சாமி.

‘துடிக்­கும் கரங்­கள்’ படத்தை வேலு­தாஸ் இயக்­கி­யுள்­ளார். மிஷா நரங் கதா­நா­ய­கி­யாக நடித்­துள்­ளார்.

இயக்­குநர் வேலு­தாஸ் பேசும்­போது, தாம் நீண்­ட ­கா­ல­மாக திரையு­ல­கில் பணி­யாற்றி வருவதாக வும் தம்­மை­யும் இயக்­கு­ந­ராக்­கிப் பார்க்க வேண்­டும் என்ற ஆசை­யில், தயா­ரிப்­பா­ளர் அண்­ணா­துரை இப்­ப­டத்தை தயா­ரித்­துள்­ள­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

“கதைக்கு ஏற்ற நாய­க­னாக இருந்­த­தால் விமலை ஒப்­பந்­தம் செய்­தோம். நான் எதிர்­பார்த்­த­தை­விட அதிக ஒத்­து­ழைப்பை வழங்கி­னார். ஒட்­டு­மொத்த படக்­கு­ழு­வுக்­கும் உற்­சா­க­மும் நம்­பிக்­கை­யும் அளிக்­கும் வகை­யில் இந்­தப் படம் வெற்றி பெறும். அதற்­கான அனைத்து அம்­சங்­களும் உள்­ளன,” என்­றார் இயக்­கு­நர் வேலு­தாஸ்.

கடந்த சில ஆண்­டு­க­ளாக விமலுக்கு எதிர்­பார்த்த வாய்ப்புகளும் வெற்­றி­களும் அமை­ய­வில்லை.

இடை­யில் சொந்­தப் படம் தயாரிக்க முற்­பட்டு சில சிக்­கல்­களை சந்­திக்க நேர்ந்­தது.

இப்­போது நல்ல கதை­க­ளா­கத் தேர்ந்­தெ­டுத்து, அவற்­றில் மட்­டுமே கவ­னம் செலுத்தி வரு­கி­றார். அந்த வகை­யில் ‘துடிக்­கும் கரங்­கள்’ படம் தனக்கு நல்ல திருப்பு­மு­னையைத் தரும் என எதிர்­பார்க்­கி­றா­ராம்.

படத்துக்கான விளம்பர நட வடிக்கைகளை சிறப்பாகச் செய்ய தயாரிப்புத் தரப்பு முன்வந்திருப்ப தாகத் தகவல். இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகே அடுத்த கட்ட நகர்வுகளை முடிவு செய்ய இருக்கிறார் விமல்.

‘துடிக்கும் கரங்கள்’ படம் விரைவில் திரைகாண உள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!