‘சிம்பு, ராகுல் என் நண்பர்கள்’

தன்­னைப் பற்றி வெளி­யா­கும் கிசு­கி­சுக்­கள் குறித்து எப்­போ­துமே கவ­லைப்­பட்­ட­தில்லை என்­கி­றார் நிதி அகர்­வால்.

உத­ய­நிதி ஸ்டா­லி­னு­டன் நடித்­துள்ள ‘கல­கத் தலை­வன்’ படத்­துக்­குப் பிறகு தமி­ழில் கைவ­சம் வேறு எந்த தமிழ்ப்­பட வாய்ப்­பும் இல்லை என்று வெளிப்­ப­டை­யா­கப் பேசு­கி­றார். தெலுங்­கில் பவன் கல்­யா­ணு­டன் நடித்து வரு­கி­றா­ராம். மலை­யா­ளத்­தி­லும் ஒரு புதுப் படத்­தில் ஒப்­பந்­த­மாகி உள்­ளார்.

“என்­னைப் பற்றி தமிழ் ஊட­கங்­களில் பல்­வேறு கிசு­கி­சுக்­கள் வந்­துள்­ளன. அவை அனைத்­தை­யுமே நானும் படித்­தி­ருக்­கி­றேன். சில சம­யங்­களில் வாய்­விட்டுச் சிரித்­தி­ருக்­கி­றேன்.

“இந்­திய கிரிக்­கெட் வீரர் கே.எல்.ராகு­லுக்­கும் எனக்கும் காதல் என்று சிலர் பேசி­னர். பிறகு நடி­கர் சிம்­பு­வுக்­கும் எனக்­கும் திரு­ம­ணம் என்­றும் ஒரு செய்தி வெளி­யா­னது. நானும் ஊட­கச் செய்­தி­க­ளைப் படிப்­பதால் இது­போன்ற கிசு­கி­சுக்­கள் என்னை அதி­கம் பாதிப்­ப­தில்லை. அதே­ ச­ம­யம் ஊட­கச் செய்­தி­களில் பல உண்­மைத் தக­வல்­களும் இடம்­பெ­று­கின்­றன. இதை யாரும் மறுக்க முடி­யாது.

“சிம்பு, ராகுல் போன்­ற­வர்­கள் எனது நண்­பர்­க­ளாக இருக்­கக்­கூ­டாதா? நாம் ஒரு துறை­யில் ஈடு­பட்டு, நிறைய உழைக்­கி­றோம். அதற்­கான வளர்ச்­சி­யும் ஏற்படு­கிறது. எனவே நம்­மைப் பற்றி தொடர்ந்து ஏதே­னும் ஒரு செய்தி வெளி­வ­ரு­வது நல்ல விஷ­யம்­தானே?”

“அதே­ச­ம­யம் தொடர்ந்து எதிர்­மறை தக­வல்­க­ளாக வெளி­வ­ரு­வ­தும் சரி­யல்ல. என்­னைப் பொறுத்­த­வரை நான் யார் என்­பது எனது பெற்­றோ­ருக்­கும் நெருக்­க­மா­ன­வர்­க­ளுக்­கும் தெரிந்­தால், அது போது­மா­னது. மற்­ற­படி, நான் சார்ந்­துள்ள சினிமா தொழி­லும், அதில் எனது வளர்ச்­சி­யும்­தான் எனக்கு முக்­கி­யம்,” என்று தெளி­வா­க­வும் ஆணித்­த­ர­மா­க­வும் பேசு­கி­றார் நிதி அகர்­வால்.

திரை­யு­ல­கில் அறி­மு­க­மான வேகத்­தில் நான்கு தென்­னிந்­திய மொழி­களில் நடித்து முடித்­துள்­ளதை தாம் பெரிய சாத­னை­யா­கக் கரு­த­வில்லை என்று குறிப்­பி­டு­ப­வர், நான்கு மொழி­க­ளி­லும் தமக்­கென சிறு ரசிகர் கூட்­டம் உரு­வாகி இருப்­ப­து­தான் மகிழ்ச்சி அளிக்­கிறது என்­கி­றார்.

“எந்த கதா­நா­ய­க­னு­டன் இணைந்து நடிக்­கி­றேன் என்­பது ஒரு­வ­கை­யில் முக்­கி­யம்­தான். அதே­ச­ம­யம் எந்­தக் கதா­நா­ய­க­னைப் போல் நடிக்க ஆசை என்று கேள்வி எழுப்­பி­னால் அதற்­கும் என்­னி­டம் பதில் உண்டு.

“எனக்கு ‘கேஜி­எஃப்’ நாய­கன் யாஷ் நடிச்ச கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க ஆசை. ‘லேடி யாஷ்’ என்று எல்­லோ­ரும் என்­னைக் குறிப்­பிட வேண்­டும் என விரும்பு­கி­றேன். அதே­போல் ரன்­பீர் கபூர் நடித்த ஒரு கதா­பாத்­தி­ரத்­தி­லா­வது நடிக்க விரும்புகிறேன்.

“தமி­ழைப் பொறுத்­த­வரை என் பட்­டி­யல் நீள­மாக இருக்­கும். விஜய், அஜித் இரு­வ­ரும் பட்­டி­ய­லின் தொடக்­கத்­தில் இடம்­பெற்­றுள்­ள­னர். அவர்­கள் இரு­வரு­ட­னும் இணைந்து நடிக்­க­வும் ஆசை, அவர்­கள் ஏற்று நடித்த கதா­பாத்­தி­ர­மா­க­வும் திரை­யில் தோன்ற ஆசை,” என்­கி­றார் நிதி அகர்­வால்.

திற­மை­யான நடிகை என்று பெய­ரெ­டுத்த பிறகு தமி­ழில் ஏன் பெரிய வாய்ப்­பு­கள் அமை­ய­வில்லை என்­றெல்­லாம் தாம் யோசிப்­பதே இல்லை என்று குறிப்­பிடுபவர், ஓய்வு கிடைக்­கும்­போது மற்ற திற­மை­களை வளர்த்­துக் கொள்­வ­தில் கவ­னம் செலுத்து­கி­றா­ராம். அந்த வகை­யில் பல்­வேறு மொழி­களைக் கற்க வேண்­டும் என விரும்­பு­வ­தா­கச் சொல்­கி­றார்.

“பெங்­க­ளூ­ரில் பிறந்­த­தால் கன்­ன­டத்­தில் நன்­றாகப் பேசு­வேன். எனது முதல் படம் இந்தி மொழி­யில் வெளி­யா­னது. அதனால் அந்த மொழியை வேகமாகக் கற்­றுக்­கொண்­டேன்.

“தமிழிலும் தெலுங்­கி­லும் தொடர்ந்து நடித்­த­தால் இரு மொழி­க­ளி­லும் ஓர­ளவு நன்­றா­கப் பேசு­வேன். ஆங்­கி­லத்­தி­லும் சர­ள­மா­கப் பேசு­வேன்.

நிதி அகர்­வால் எப்­ப­டிப்­பட்ட பெண்?

“எனக்கு எதை­யும் மறைக்­கத் தெரி­யாது. மன­தில் பட்­டதை வெளிப்­படை­யா­கப் பேசி­வி­டு­வ­து­தான் என் குணம். எ­தைக் கண்­டும் பயந்து ஒதுங்க மாட்­டேன். கார­ணம், நாம் ஒரு­முறை ஒதுங்கி நின்­றால் பிறகு நம்மை துரத்­தத் தொடங்கிவிடுவார்கள்.

“வெற்­றிக்­காக கடு­மை­யாக உழைப்­பேன். எதை­யும் நேர்­ம­றை­யான கோணத்­தில் அணு­கு­வேன். தன்­னம்­பிக்­கை­தான் எனது பலம்,” என்­கி­றார் நிதி அகர்­வால்.

 தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடிதான் நடிகை கீர்த்தி சுரேஷின் பூர்வீகமாம். அண்மையில் தனது தாயார், பாட்டியுடன் அங்கு சென்று திரும்பி உள்ளார். அங்கு தமது மூதாதையர்கள் வாழ்ந்த வீட்டின் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். “அந்த வீட்டுக்குள் நுழைந்து தரையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். பிறகு இன்னும்கூட அங்கே வசித்து வரும் உறவினர்களை நலம் விசாரித்தோம். திருக்குறுங்குடியில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகவும் பழமை வாய்ந்த கோவில் உள்ளது. அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பினோம். அப்போது ஏற்பட்ட உணர்வை விவரிக்க வார்த்தைகளே இல்லை,” என்கிறார் கீர்த்தி சுரேஷ். திருக்குறுங்குடியில் தாம் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

 கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்காமல் தன்னைத் தேடி வரும் குணச்சித்திர கதா பாத்திரங்களையும் ஏற்று நடிக்கிறார் கலையரசன். இந்நிலையில், உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து ‘வாழை’ என்ற பெயரில் உருவாகும் புதிய படத்தில் அவரை நாயகனாக ஒப்பந்தம் செய்துள்ளனர். இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார். ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மாரி இயக்கும் இந்தப் படத்தில் நிகிலா விமல் நாயகியாகவும், ‘வெயில்’ பிரியங்கா, திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

 சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திப் படங்கள், இணையத் தொடர்களில் நடிக்க ஜோதிகாவுக்கு வாய்ப்புகள் தேடி வருகின்றன. அவரும் ஆர்வத்துடன் கதை கேட்டு வருவதாகத் தகவல்.

 இனி ஆண்டுதோறும் இருமுறையாவது ரசிகர்களை சந்திப்பது என முடிவு செய்துள்ளாராம் விஜய்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!