‘பாடம் கற்றுக்கொண்டேன்’

"பணம் கொடுத்து திரை­ய­ரங்­குக்கு வந்து படம் பார்க்க வரு­ப­வர்­களுக்கு போர­டிக்­கக்­கூ­டாது. அதை மட்­டுமே மன­திற்­கொண்டு நான் நடிக்­கும் படங்­கள், கதை­க­ளைத் தேர்வு செய்­கி­றேன்," என்­கி­றார் ஹன்­சிகா.

'மஹா' படத்­துக்­குப் பிறகு அவர் தரப்­பில் இருந்து எந்­த­வி­தத் தக­வ­லும் இல்லை. தொழி­ல­தி­பர் ஒரு­வ­ரைக் காதலிப்­ப­தா­க­வும் அவ­ரைத் திரு­ம­ணம் செய்ய இருப்­ப­தா­க­வும் ஹன்சிகா தரப்­பில் இருந்தே ஒரு தக­வல் வெளி­யாகி உள்­ளது. இந்­நி­லை­யில், கடந்த கால தோல்­வி­களில் இருந்து தாம் பல விஷ­யங்­க­ளைக் கற்­றுக்­கொண்­ட­தா­கச் சொல்­கி­றார் ஹன்சிகா.

"பல புது­முக இயக்­கு­நர்­கள் என்­னி­டம் கதை சொல்ல வரு­கி­றார்­கள். கதை கேட்­ப­தற்கு என கணி­ச­மான நேரத்தை ஒதுக்­கு­கி­றேன். கொஞ்­சம் போர­டித்­தால்­கூட அந்­தக் கதையை ஏற்­ப­தில்லை என்­ப­தில் உறுதி­யாக இருக்­கி­றேன்.

"முன்பே படங்­கள் இயக்­கிய அனு­ப­வத்­து­டன் இயக்­கு­நர்­கள் சொல்­லும் கதை­யில் ஏதே­னும் சந்­தே­கங்­கள் எழுந்­தால், உட­ன­டி­யாக விளக்­கம் கேட்டு தெளிவு பெறு­கி­றேன். அதே­ச­ம­யம் ஒரு படத்­தின் வெற்றி, தோல்­வியை யாரா­லும் முன்­கூட்­டியே கணித்­து­விட இய­லாது என்­ப­தை­யும் உணர்ந்­துள்­ளேன்.

"வெற்­றி­களில் இருந்து மட்டு­மல்ல, தோல்­வி­களில் இருந்­தும் பல பாடங்­க­ளைக் கற்றுக்­கொண்­டுள்­ளேன். விமா­னம் என்­பது எப்­போ­தும் மேல்­நோக்­கியே பறந்து கொண்­டிருக்­காது. அது­வும் தரை­யி­றங்­கத்­தான் வேண்­டும்," என்று சொல்­லும் ஹன்­சிகா ஐம்­பது திரைப்­ப­டங்­களில் நடித்து முடித்­துள்­ளார்.

தற்­போது 'கார்­டி­யன்' படத்­தின் படப்­பி­டிப்­பில் திகி­லூட்­டும் தோற்­றத்­தில் மிரட்­டிக்­கொண்­டி­ருக்­கி­றார். இந்­தப் படம் அடுத்த ஆண்டு வெளி­யீடு காணு­மாம்.

இதற்­கி­டையே, ஹன்­சிகா நடிப்­பில் ஆறு படங்­கள் வெளி­யீடு காண தயா­ராக உள்­ளன. ஒவ்­வொன்­றும் வெவ்­வேறு கதைக்­க­ளங்­களில் உரு­வாகி உள்­ள­தா­கச் சொல்­கி­றார்.

"அடுத்து வெளி­யாக உள்ள எனது படங்­களில் 'கார்­டி­யன்' குறித்து நானும் மிகுந்த எதிர்­பார்ப்­பு­க­ளு­டன் காத்­தி­ருக்­கி­றேன். அதை வெறும் திகில் படம் என்று வகைப்­ப­டுத்­தி­விட இய­லாது. நல்ல கருத்­து­க­ளைத் தாங்கி வரும் படைப்பு. 'வாலு' பட இயக்­கு­நர் விஜய்­சந்­தர் தயா­ரிக்­கும் படம். 'கூகல் குட்­டப்பா' படத்­தின் இரட்டை இயக்­கு­நர்­கள் சபரி, குரு­ச­ர­வ­ணன் ஆகி­யோர் அழ­கான கதையை உரு­வாக்கி உள்­ள­னர்.

"இரு­வ­ரும் கதையை விவ­ரித்­த­போதே அதில் உள்ள பல்­வேறு அம்­சங்­கள் என்­னைக் கவர்ந்­தன. எனது கதா­பாத்­தி­ரத்­துக்­காக கண்­களில் லென்ஸ் பொருத்தி நடித்­துள்­ளேன். அத­னால் கண்­க­ளா­லேயே மிரட்­டு­வ­தாக படக்­கு­ழு­வி­னர் கிண்­டல் செய்­த­னர். ஆனால் அதுவும் ஒரு­வ­கை­யில் உண்­மை­தான். எனது தோற்­றத்­தை­யும் கண்­க­ளை­யும் திரை­யில் பார்க்­கும்­போது எனக்­கும் அப்­ப­டித்­தான் தோன்­றி­யது," என்­கி­றார் ஹன்­சிகா.

இவர் சிறந்த ஓவி­யர் என்­பது தெரிந்த விஷ­யம். மிக விரை­வில் தமது ஓவி­யங்­களை வைத்து கண்­காட்சி நடத்­தப்­போ­வ­தாக நீண்­ட­கா­ல­மா­கச் சொல்லி வரு­கி­றார். ஆனால் கண்­காட்­சி­தான் நடந்­த­பா­டில்லை.

"தொடர்ச்­சி­யான வேலை­க­ளால் ஏற்­படும் மன அழுத்­தத்­தைக் குறைத்து என்னை அமை­திப்­ப­டுத்­தும் கரு­வி­யாக ஓவி­யங்­க­ளைப் பார்க்­கி­றேன். நினைத்த நேரத்­தில் ஓவி­யம் தீட்­டி­விட இய­லாது. அது ஒரு­வ­கை­யில் தியா­னம் மாதி­ரி­யான அனு­ப­வம்.

"ஓவி­யத்­துக்கு என நேரத்­தைச் செல­வி­டும்­போது மனம் லேசா­கி­வி­டும். மன நெருக்­கடி அதி­க­ரிப்­ப­தாக உண­ரும்­போது ஓவி­யம் பக்­கம் போய்­வி­டு­வேன். ஓர் ஓவி­யத்தை வரைந்து முடிக்க குறைந்­த­பட்­சம் நான்­கைந்து மணி நேர­மா­வது ஆகும். அந்த நேர இடை­வெ­ளிக்­குள் என் மன­தில் இருக்­கும் பதற்­றம், நெருக்­கடி, குழப்­பம் என எல்­லாமே முடி­வுக்கு வந்­து­வி­டும்.

"படப்­பி­டிப்­பின்­போது ஓவி­யங்­கள் வரை­வ­தில்லை. அண்­மைக்­கா­லங்­களில் சில நல்ல ஓவி­யங்­க­ளைத் தீட்­டி­யுள்­ளேன். அவற்­றைக் கொண்டு ஒரு கண்­காட்­சியை ஏற்­பாடு செய்­யும் முடி­வில் மாற்­றம் இல்லை. எனி­னும் இது­வரை அதற்­கான நேர­மும் சூழ­லும் அமை­ய­வில்லை," என்று சொல்­லும் ஹன்­சிகா, தனது திரு­மணம் குறித்து எந்­தத் தக­வ­லை­யும் தற்­போது பகிர இய­லாது என்­கி­றார்.

அண்­மைக்­கா­ல­மாக புத்­தர் போத­னை­களில் தமக்கு ஈடு­பாடு அதி­கரித்­துள்­ள­தா­கக் குறிப்­பிடு­ப­வர், தாம் பௌத்த சம­யத்­தைப் பின்­பற்­ற­வில்லை என்று தெளிவு­படுத்தி உள்­ளார்.

, :   

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!