விஷ்ணு விஷால்: கடுமையாக உழைத்தோம்

'கட்டா குஸ்தி' படத்­தின் வெற்­றிக்­காக ஒட்­டு­மொத்த படக்­குழுவினரும் கடு­மை­யா­கப் பாடு­பட்­ட­தாக அதன் நாய­கன் விஷ்ணு விஷால் தெரி­வித்­துள்­ளார்.

மேலும் எல்­லா­ரும் நினைப்­பது போல் இப்­ப­டத்தை கிரா­மப் பகு­தி­யில் பட­மாக்­க­வில்லை என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

'கட்டா குஸ்தி' படம் அண்மையில் வெளி­யாகி ரசி­கர்­க­ளி­டம் நல்ல வர­வேற்பைப் பெற்று வரு­கிறது. இதை­ய­டுத்து அப்­ப­டத்­தின் இயக்கு­நர் செல்லா அய்­யாவு, நாய­கன் விஷ்ணு விஷால் உள்­ளிட்ட படக்­கு­ழு­வி­னர் சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­களைச் சந்­தித்­துப் பேசி­னர்.

அப்­போது இப்­ப­டம் குறித்த சுவா­ர­சி­ய­மான தக­வல்­க­ளைப் பகிர்ந்துகொண்­டார் விஷ்ணு விஷால்.

"இந்த படம் ஓர் ஒதுக்குப்புறமான ஊரில் நடக்கும் கதைதான். பெரும் பாலான காட்சிகளை இந்தக் கோணத்தில்தான் படமாக்கினோம்.

"இப்­போ­தெல்­லாம் தமிழ் சினிமா ரசி­கர்­கள் ஒவ்­வொரு படத்­தை­யும் கச்­சி­த­மாக எடை­போட்டு தங்­க­ளது ஆத­ரவை வழங்­கு­கின்­ற­னர். அந்த வகை­யில் எங்­க­ளு­டைய படத்­துக்கும் ஆத­ரவு நீடிக்­கும் என எதிர்பார்க்­கி­றோம்," என்­றார் விஷ்ணு விஷால்.

'லவ் டுடே' படத்­துக்கு கிடைத்­துள்ள வர­வேற்பு இளம் படைப்­பாளி­கள் மத்­தி­யில் புதிய நம்­பிக்கையை ஏற்­ப­டுத்தி உள்­ள­தாக படத்­தின் இயக்­கு­நர் செல்லா அய்யாவு கூறி­னார்.

'கட்டா குஸ்தி' படத்தின் முதல் நாள் வசூல் மன­நி­றைவு அளிக்­கும் வகை­யில் இருப்­ப­தா­கப் படக்­கு­ழு­வி­னர் உற்­சா­கத்­து­டன் குறிப்­பி­டு­கின்­ற­னர்.

இதற்கிடையே, 'கட்டா குஸ்தி' மண்வாசனையுடன் கூடிய தரமான படைப்பு என ரசிகர்கள் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!