திரைத் துளிகள்

 நகைச்சுவை நடிகர் சிவநாராயணமூர்த்தி மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 67. ஏராளமான தமிழ்ப் படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் சிவ நாராயணமூர்த்தி. அவரது மறைவுக்கு திரையுலகப் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 எந்தக் கதைகளில் நடிக்க வேண்டும் என்பதை தனது உள்ளுணர்வுதான் தீர்மா னிக்கிறது என்கிறார் தமன்னா.

திருமணத்துக்குத் தாம் அவசரப்படவில்லை என்றும் அது எப்போது நடக்க வேண்டுமோ அப்போது நடக்கும் என்றும் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

“இப்போது என்னை ஒரு நட்சத்திரமாக நான் கருதுவதில்லை. நடிகையாக மட்டுமே பார்க்கிறேன். படங்களில் ஒப்பந்தமாகும்போது, உடன் நடிப்பவர் பெரிய கதாநாயகனா அல்லது புதுமுகமா என்றும் யோசிப்பதில்லை.

“நான் நடித்துள்ள மூன்று புதுப் படங்கள் அடுத்த ஆண்டு நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கின்றன. எனது திருமணம் பற்றிக் கேட்கிறார்கள். முதலில் ஒரு மருத்துவரை மணந்ததாகச் சொன்னார்கள். பிறகு தொழிலதிபரைத் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறினார்கள். இரண்டுமே உண்மையல்ல,” என்கிறார் தமன்னா.

 சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தின் முதல் பாடல் இணையத்தில் விரைவில் வெளியாகிறது. இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாக உள்ளது.

 ‘வாரிசு’ படத்தில் விஜய்யின் சகோதரராக நடித்துள்ளார் நடிகர் ஷாம். படப்பிடிப்பின் போது விஜய் மிக இயல்பாகப் பேசிப் பழகியதாக அவர் கூறியுள்ளார். “அஜித்தின் ‘துணிவு’, ‘வாரிசு’ ஆகிய இரு படங்களுமே ஒரே சமயத்தில் வெளியாவது குறித்து ஷாம் கேட்டபோது, இரண்டும் வெற்றி பெற விரும்புவதாக விஜய் கூறினாராம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!