நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தான் பாடிய தமிழ் பாடலின் காணொளியை பதிவிட்டு இருக்கிறார்.
அதைக் கேட்ட அவரின் ரசிகர்கள், “நீங்கள் அழகான நடிகை என்று எங்களுக்குத் தெரியும். இவ்வளவு இனிமையான குரல்வளம் உங்களுக்கு உண்டு என்று இப்போதுதான் தெரிந்தது. நீங்கள் நடிக்கும் படங்களில் நீங்களே உங்கள் பாடல்களுக்கு பாடுங்கள்,” என்று பாராட்டி பதிவிட்டு வருகிறார்கள்.
அனுபமா பரமேஸ்வரன் தனுஷுடன் ‘கொடி’, அதர்வாவுடன் ‘தள்ளிப்போகாதே’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
தற்பொழுது கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ‘சைரன்’ படத்திலும் நடிக்கிறார்.