‘கருவேல மரங்கள் குறித்த அரசியலை பேசும் படம்’

‘மத­யா­னைக் கூட்­டம்’ என்ற வெற்­றிப் படத்தைத் தந்த விக்­ரம் சுகு­மா­றன் நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு இயக்­கும் படம் ‘இரா­வ­ணக் கோட்­டம்’

சாந்­தனு நாய­க­னாக நடிக்­கி­றார். இந்­தப் படம் வெளி­யா­ன­தும் சாந்­தனு தமிழ்த் திரை­யு­ல­கில் புதிய உய­ரங்­க­ளைத் தொடு­வார் என்­கி­றார் இயக்­கு­நர்.

‘இரா­வ­ணக் கோட்­டம்’ என்ற தலைப்பு வித்­தி­யா­ச­மாக உள்­ளதே?

“உண்­மை­யில் இந்­தப் படத்­துக்கு ‘தமி­ழ­கம்’ என்­று­தான் தலைப்பு வைத்­தி­ருக்க வேண்­டும். ஒரு தமிழ் அர­ச­னு­டைய ஊரைப் பற்றி பேசக் கூடிய படம்.

“இரா­வ­ணன் ஒரு தமிழ் அர­சன்­தான். சோழர், பாண்­டி­யர் என்­று­கூட தலைப்பு வைத்­தி­ருக்­க­லாம்.

“ஏற்­கெ­னவே கிரா­மத்­துக் கதை­யைத்­தான் இயக்கி இருந்­தேன். அடுத்து, நக­ரத்தை மையப்­ப­டுத்தி கதைக்­க­ளத்தை அமைக்­க­லாம் என நினைத்­தி­ருந்­தேன். ஆனா­லும் மீண்­டும் கிரா­மத்­துக் கதை­தான் அமைந்­தது.

“காலம் கால­மாக இருக்­கும் கரு­வேல மர அர­சி­யல், அதற்­குப் பின்­ன­ணி­யில் உள்ள பலம்­வாய்ந்த நிறு­வ­னங்­கள், சாதிப் பிரச்­சி­னை­கள் ஆகி­ய­வற்றை மையப்­ப­டுத்தி உரு­வாகி உள்­ளது இந்­தப் படம்.

“கரு­வேல மரம் நம் நாட்­டுக்­குள் வந்­த­தற்கு வேண்­டு­மா­னால் ஆங்­கி­லே­யர்­கள் கார­ண­மாக இருக்­க­லாம். ஆனால், அதை அழிக்க முடி­யா­மல் இருக்க என்ன கார­ணம், யார் செய்­யும் சதி இது என்று நிறைய கேள்­வி­கள் உள்­ளன.

“அதி­கா­ரத்­தில் உள்­ள­வர்­கள் நினைத்­தால் கரு­வேல மரங்­களை அடி­யோடு அழிக்­க­லாம். ஆனால் அதைச் செய்­யா­மல் அதைக் கொண்டு சாதிப் பிரச்­சி­னை­யைத் தூண்­டி­விட்டு அர­சி­யல் செய்­கி­றார்­கள். அதைப்­பற்­றித்­தான் இந்­தப் படம் விவா­திக்­கிறது.

“சாந்­த­னு­வுக்கு இந்­தப் படம் அவ­ரது திரைப்­ப­ய­ணத்­தில் மிக முக்­கி­ய­மா­ன­தாக இருக்­கும். அவ­ரும் தன் பொறுப்பை உணர்ந்து அரு­மை­யாக நடித்­துள்­ளார்.

“ஆனந்தி திரை­யில் அழ­காகத் தெரி­யக்­கூ­டிய நாயகி. இந்­தப் படத்­தி­லும் அவர் தனது இயல்­பான நடிப்­பால் கவர்ந்­துள்­ளார். இது சமூக நலம் சார்ந்த கருத்தை முன்னிறுத்தும் படம்,” என்கிறார் விக்­ரம் சுகு­மா­றன்.

, :

தமிழகத்  

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!