திரைத் துளி­கள்

 வாழ்க்கையில் எப்போதுமே நன்றி உணர்வு வேண்டும் என்கிறார் நடிகை சாய்பல்லவி.

இது தொடர்பாக தனது சமூக ஊடகப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

“வாழ்க்கையில் புன்சிரிப்பு, ஆசை, நன்றி உணர்வு இருந்தால் போதும்’’ என்று குறிப்பிட்டுள்ளதுடன், தாம் அழகாகச் சிரிக்கும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். அவரது இந்தப் பதிவை ரசிகர்கள் பலரும் பாராட்டி உள்ளனர். அனைவரும் சாய்பல்லவி சொல்வதைப் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

 நடிகை வரலட்சுமி சரத்குமாரை இன்ஸ்டகிராம் தளத்தில் பின்பற்றுவோர் எண்ணிக்கை இரண்டு பில்லியனைக் கடந்துவிட்டதாம். இந்த உற்சாகத்தை வெளிப்படுத்தும் விதமாக, தாம் குத்தாட்டம் போடும் காணொளி ஒன்றை அவர் அதே தளத்தில் வெளியிட்டுள்ளார்.

 லிங்குசாமி இயக்கத்தில் ‘பையா 2’ படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்க, அவரது ஜோடியாக ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிப்பார் எனக் கூறப்பட்டது. ஆனால், இத்தகவலை ஜான்வியின் தந்தை போனி கபூர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இப்போதைக்கு தன் மகள் எந்தத் தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

 ‘ஜெயிலர்’ படத்தில் ‘பருத்தி வீரன்’ சரவணன் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!