உள்ளூர் கலைஞர் ஷபீரின் ‘கேங்ஸ்டா’ பாடல் வெற்றி

அஜித் குமார் நடிப்­பில், ஹெச். வினோத் இயக்­கத்­தில் இவ்­வாண்டு பொங்­க­லன்று வெளி­வந்­தது ‘துணிவு’ திரைப்­ப­டம். இதில் இடம்பெற்ற ‘கேங்ஸ்டா’ பாடல் யூடியூப் தளத்தில் 12 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளன. ஸ்பாட்டிஃபை தளத்தில் இரண்டரை மில்லியன் முறை (streams) ஒலித்துள்ளது.

கடந்த ஆண்டு கிறிஸ்­து­மஸ் தினத்­தன்று வெளி­வந்த இப்­பா­ட­லுக்கு குர­லும் வரி­களும் கொடுத்­துள்­ளார், சிங்கப்பூர் கலை­ஞர் ஷபீர். இப்­பா­டல் வெற்றி­ய­டைந்­த­தில் அவர் மகிழ்ச்சி தெரி­வித்­தார்.

‘கேங்ஸ்டா’ பாட­லின் வேக­மும் துடிப்­பும் உல­கெங்­கி­லும் உள்ள அஜித் ரசி­கர்­களை கவர்ந்­துள்­ளது தன் மனதை தொட்­டுள்­ள­தாக கூறி­னார் ஷபீர். மலே­சி­யா­வில் அமைந்­துள்ள அஜித் ரசி­கர் மன்­றங்­களில் ஒன்று, நீண்ட காலத்­துக்­குப் பின்­னர் நடி­கர் அஜித்தை கொண்­டா­டு­வ­தற்­கென ஒரு சிறப்புப் பாடலை தந்­துள்­ள­தாக கூறிய சம்­ப­வத்தை நினை­வு­கூர்ந்­தார் ஷபீர்.

“இன்­னும் பத்­தாண்­டு­களுக்கு இது எல்­லோ­ரின் மன­தி­லும் நிலைத்­தி­ருக்­கும் என்று அவர்­கள் கூறி­யது மன­நி­றைவு அளித்­தது,” என்­றார் அவர்.

இசை­ய­மைப்­பா­ளர் ஜிப்­ரா­னின் கோரிக்­கையை ஏற்று கொவிட்-19 சம­யத்­தில் தனக்கு மிக நெருங்­கிய ராப் பாணி­யி­லான இப்­பா­ட­லின் வடி­வ­மைப்­பில் சிங்­கப்­பூ­ரில் இருந்­து­கொண்டே கைகொ­டுத்­தார் ஷபீர். அவ­ரது மாதிரி குரல் பதிவு இயக்­கு­ந­ரை­யும் நடி­கர் அஜித்­தை­யும் கவர்ந்­த­தைத் தொடர்ந்து, அவரே இப்­பா­டலை பாடு­வது என முடி­வா­ன­தாக அவர் கூறி­னார்.

தற்­பு­கழ்ச்­சியை பிர­தி­ப­லிக்­கும் விதத்­தி­லான ­வ­ரி­க­ளை அஜித் விரும்­பாத கார­ணத்­தி­னால், இவ்­வாய்ப்­பைப் பயன்­படுத்தி தன்­மு­னைப்­பூட்­டும் கருத்­து­களை கரு­வாக அமைக்க முயற்சி செய்­துள்­ள­தாக விளக்­கி­னார் ஷபீர். அஜித் போன்ற ஒரு நட்­சத்­தி­ரத்­துக்­காக பாடல் எழு­து­கை­யில் இத்­த­கைய சுதந்­தி­ரம் கிடைத்­ததை அவர் சுட்­டி­னார். தமி­ழக இசைத்­து­றைக்கு தன்னை அறி­மு­கப்­ப­டுத்­திய ‘யாயும் ஞாயும்’ பாட­ல் அனு­ப­வத்தை ஒப்­பிட்­டார்.

இது குறித்து கூறு­கை­யில், “நீயும் நானும் என்று தொடங்­கும் வரி­கள் யாருக்­கும் புரி­யாது என்று அப்­போது சிலர் கூறி­னர். அதைப் புறந்­தள்ளி சங்க இலக்­கிய வரி­க­ளைப் பயன்­ப­டுத்­தி­யதே அப்­பா­ட­லின் வெற்­றிக்கு கார­ண­மா­னது. படைப்­பு­களில் நமக்கு நாமே உண்­மை­யாக இருப்­பது கலை­ஞர்­க­ளின் கையில் உள்­ளது என்­பதை நினை­வில் கொண்­டுள்­ளேன்,” என்­றார். சுய இசை பின்­னணி கொண்­டுள்ள தனக்கு இத்­தகைய சோதனை முயற்­சியை மேற்­கொள்ள ‘கேங்ஸ்டா’ பாடல் இடம்­கொ­டுத்­த­தா­க­வும் ஷபீர் கூறி­னார். பாடல் வரி­க­ளுக்­கான தூண்­டு­தலை உள்­நோக்கி­யும் வெளி­நோக்­கி­யும் தேடிக் கொள்­வ­தாக ஷபீர் மேலும் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!