‘அக்கறை உள்ள வாத்தி’

எந்­த­வொரு சூழ்­நி­லை­யில் இருந்­தும் நம்மை தற்­காத்­துக்­கொள்ள கல்­வி­ய­றிவு மிக முக்­கி­யம் என்­கி­றார் தனுஷ்.

அவர் நடித்­துள்ள ‘வாத்தி’ படத்­தின் இசை வெளி­யீட்டு நிகழ்ச்சி சென்­னை­யில் சிறப்­பாக நடந்­தே­றி­யது. இயக்­கு­நர்­கள் பார­தி­ராஜா, சமுத்­தி­ரக்­கனி உள்­ளிட்ட பலர் அதில் கலந்­து­கொண்­ட­னர்.

நிகழ்ச்­சி­யில் பேசிய தனுஷ், சினிமா துறை­யில் ஏற்ற இறக்­கங்­கள் ஏற்­ப­டு­வது இயல்பு என்­றார். கொரோனா நெருக்­கடி வேளை­யில் உரிய வாய்ப்­பு­கள் இல்­லா­மல், திரை­யு­ல­கம் சார்ந்த பணி­கள் இன்றி மன உளைச்­ச­லுக்கு ஆட்­பட்­ட­தா­கக் குறிப்­பிட்­டார்.

“படிப்பு என்­பது பிர­சா­தம் மாதிரி. அதை ஐந்து நட்­சத்­திர விடு­தி­யில் வைத்து விற்­கா­தீர்­கள் என்­ப­து­தான் இந்­தப் படத்­தின் ஒரு­வ­ரிக் கதை. நான் பள்­ளி­யில் படித்­துக் கொண்­டி­ருந்­த­போது, என் பெற்­றோர் நிச்­ச­யம் கல்­விக்­கட்­ட­ணத்தைச் செலுத்தி இருப்­பார்­கள் என்­பது தெரி­யும். ஆ­னால் படிப்­பில் கவ­னம் இன்றி சுற்­றித் திரிந்­தி­ருக்­கி­றேன்.

“இப்­போது என் பிள்­ளை­களைப் படிக்க வைக்­கும்­போ­து­தான் எல்­லாம் புரி­கிறது. எந்­தச் சூழ்­நிலை வந்­தா­லும் படிப்பு மிக­வும் அவ­சி­யம். எண்­ணம் போல் வாழ்க்கை என்­பார்­கள். உங்­க­ளு­டைய எண்­ணத்தை படிப்­பில் வையுங்­கள். அதுதான் உங்­க­ளைக் காப்­பாற்­றும்,” என்­றார் தனுஷ்.

பின்­னர் தனது ரசி­கர்­க­ளுக்கு ஓர் அறி­வு­ரை­யை­யும் கூறி­னார். தனது வாக­னத்­துக்­குப் பின்­னால் ரசி­கர்­கள் பின்தொடர்­வதை விரும்­ப­வில்லை என்­றும் அது தமக்கு கவலை அளிப்­ப­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

“எனது வாக­னத்தை பல­ரும் பின்­தொ­டர்ந்து வரு­கி­றீர்­கள். உங்­கள் பெற்­றோர் உங்­கள் மீது நம்­பிக்கை வைத்து வெளியே அனுப்பி வைக்­கி­றார்­கள். ஆனால் நீங்­கள் ஈடு­படும் சில நட­வ­டிக்­கை­கள் எனக்கு அச்­சத்தை ஏற்­ப­டுத்து­கிறது. அவ்­வாறு செய்­யா­தீர்­கள்,” என்­றார் தனுஷ்.

ஆசி­ரி­யர்­கள் உன்­ன­த­மான பணியைச் செய்து வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், அந்­தப் பணியை எல்­லா­ரும் செய்­து­விட முடி­யாது என்­றார்.

“நான் ஏதோ புண்­ணி­யம் செய்­தி­ருக்க வேண்­டும். அத­னால்­தான் என் பெற்­றோர்­க­ளின் வேண்­டு­தல்­கள் உங்­க­ளு­டைய கைத்­தட்­ட­லாக என்னை வந்து சேர்­கிறது.

“கடந்த 1990களில் நடக்­கும் கதையை மைய­மாக வைத்து இந்­தப் படம் உரு­வாகி உள்­ளது. இந்­தப் படத்­தில் நடிக்­கும்­ போதுதான் ஆசி­ரி­யர்­க­ளின் வேலை எவ்­வ­ளவு கஷ்­டம் என்­பது புரிந்­தது. ஆசி­ரி­யர்­கள் தான் நம் தலை­யெ­ழுத்தை மாற்­றக்கூடி­ய­வர்­கள்.

“கொரோனா ஊர­டங்­கின் போதுதான் இயக்­கு­நர் வெங்கி இந்­தக் கதை­யைச் சொன்­னார். நானே அப்­போது வேலை இல்­லா­மல் மன உளைச்­ச­லு­டன் இருந்­தேன். எனவே தேடி­வ­ரும் கதை­களை எப்படி­யா­வது மறுத்­து­வி­ட­லாம் என்­பதே எனது எண்­ண­மாக இருந்­தது. ஆனால் இயக்­கு­நர் வெங்கி சொன்ன கதை­யைக் கேட்­ட­தும் மனம் மாறி­யது. உண்­மை­யா­கவே அது பிடித்­துப்­போ­னது. அத­னால் தயக்­க­மின்றி நடித்­தேன். ரசி­கர்­க­ளுக்கு இந்­தப் படம் பிடிக்­கும் என உறு­தி­யாக நம்­பு­கி­றேன்,” என்­றார் தனுஷ். இதை­ய­டுத்து பேசிய இயக்­கு­நர் சமுத்­தி­ரக்­கனி தனுஷ் ஒழுக்­கத்­தில் ஒரு வாத்­தி­யைப் போன்­ற­வர் என்றும் நடிப்­பில் அசு­ரன் என்­றும் பாராட்­டி­னார்.

“ஒரு நாள் அதி­காலை நான்கு மணிக்கு என்னைத் தொடர்­பு­கொண்டு இந்­தப் படத்­தில் இணையு­மாறு கூறி­னார் தனுஷ். இந்த நல்ல படைப்­பில் நானும் இருப்­பது மகிழ்ச்சி. எப்­போ­து­மே­ ஒரு படைப்­பாளி சமூ­கத்­தின் மீது அக்­கறை கொண்­டி­ருக்க வேண்­டும் என்­பது என் விருப்­பம்.

“இயக்குநர் வெங்கி அத்­லூரியும் என் தம்பி தனுஷும் அப்­ப­டிப்­பட்ட படைப்­பாளர்­கள். ‘வேலை­யில்லா பட்­ட­தாரி’ படத்­தில் தனு­ஷு­டன் தொடங்­கிய பய­ணம் இன்­று­வரை தொடர்­கிறது. நான் இருக்­கும்வரை இந்­தப் பயணம் தொடர வேண்­டும் என கட­வு­ளி­டம் வேண்­டிக்­கொள்­கி­றேன். தம்பி தனு­ஷு­டன் படப்­பி­டிப்­பில் பங்­கேற்­றால் எனக்­குள் இருக்­கும் இயக்­கு­நர் வீட்­டி­லேயே தங்­கி­வி­டு­வார். தனுஷ் மிகச்­சி­றந்த படைப்­பாளி.

“இப்படத்­தின் நாயகி சம்­யுக்தா அதிர்ஷ்­ட­சாலி. கார­ணம் தகுதி­யான படம் மூலம் தமிழ் சினி­மா­வுக்கு வந்­தி­ருக்­கி­றார்,” என்றார் சமுத்திரக்கனி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!