‘மறுபதிப்பு தமிழ் சினிமாவுக்கு ஒன்றும் புதிதல்ல’

பிற மொழிகளில் வெற்றிபெற்ற படங்களை மறுபதிப்பு செய்வதில் தவறேதும் இல்லை என்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன்.

‘ஜெயம்கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘வந்தான் வென்றான்’, ‘சேட்டை’, ‘இவன் தந்திரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ள இவர், மணிரத்னத் தின் சீடர் ஆவார்.

இவருடைய அடுத்த படைப்பு ‘த கிரேட் இந்தியன் கிச்சன்’.

“நேர்­மை­யா­கச் சொல்­வ­தாக இருந்­தால் இப்­போது வரு­ம் தொண்­ணூறு விழுக்­காட்­டுப் படங்­கள் அதி­கா­ர­பூர்­வ­மற்ற மறு­ப­திப்புப் படங்­கள்­தான். ஏதோ ஒரு ஹாலி­வுட் படத்­தையோ, கொரிய மொழிப் படத்­தையோ, கண்­ணுக்குத் தெரி­யாத ஜப்­பானிய மொழிப் படத்­தையோ சட்டத்துக்குப் புறம்­பாக உரிமை வாங்­கா­மல் தமி­ழில் பட­மாக்கிவிடு­கி­றார்­கள்.

“அந்த வகை­யில் நான் நேர்மை­யு­டன், கதை எழு­திய கதா­சி­ரி­யர், படத்­தின் தயா­ரிப்­பா­ள­ருக்கு உரிய பணத்தைக் கொடுத்து உரி­மம் பெற்று என் படங்­களை உரு­வாக்­கு­கி­றேன். இது எந்த­ வி­தத்­தில் தவ­றாக இருக்­கும் என்று தெரி­ய­வில்லை.

“அதே­ச­ம­யம் தர­மான படங்களை மட்­டுமே மறு­ப­திப்பு செய்கி­றேன். உள்­ள­டக்­கம் சிறப்­பாக இல்லை எனில் கண்­டு­கொள்­வ­தில்லை. மறு­ப­திப்பு என்­பது தமிழ் சினி­மா­வுக்குப் புது விஷ­யம் அல்ல,” என்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!