திரைத் துளி­கள்

 ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா இயக்கத்தில் தயாராகும் ‘உன்னால் என்னால்’ என்ற படத்தில் வில்லியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சோனியா அகர்வால்.

அரசாங்கத்துக்குச் சொந்த மான நிலப்பகுதிகளை விற்று பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து ஏமாற்றும் கும்பலின் தலைவி வேடமாம்.

“இது நான் வில்லியாக நடிக்கும் முதல் படம். அதனால் ஒவ்வொரு காட்சியிலும் கூடு தல் கவனம் செலுத்தியுள் ளேன்,” என்கிறார் சோனியா.

 தனுஷ் நடிப்பில் உருவாகும் அவரது ஐம்பதாவது படத்தை அவரே இயக்க உள்ளார். ஏற்கெனவே ‘பவர் பாண்டி’ படத்தை இயக்கியுள்ள அவர், இந்தப் புதிய படத்தை நூறு கோடி ரூபாய் செலவில் தயாரிக்க உள்ளதாகத் தகவல். காளிதாஸ், துஷாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். எஸ்.ஜே.சூர்யா, சந்தீப்கிஷன் ஆகியோர் தனுஷுக்கு சகோதரர்களாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. வடசென்னை பின்னணியில் குண்டர் கும்பல்கள் இடையே நிகழும் மோதல்கள்தான் கதைக்களமாம். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 கதா­நா­ய­கர்­க­ளுக்கு இணை­யாக நாய­கி­க­ளுக்­கும் ஊதி­யம் அளிக்­கப்­பட வேண்­டும் என்று கோரும் நடி­கை­க­ளின் பட்டியலில் ஷ்ருதி ஹாச­னும் இணைந்­துள்­ளார்.

ஹாலி­வுட் படங்­களில் நடித்து வரும் இந்தி நடிகை பிரி­யங்கா சோப்ரா, அண்­மைய பேட்டி ஒன்­றில் தாம் ஹாலி­வுட் நாய­கர்­க­ளுக்கு இணை­யாக சம்­ப­ளம் பெறு­வ­தா­க­வும் இந்த உய­ரத்தை அடைய தமக்கு இரு­பது ஆண்­டு­கள் தேவைப்­பட்­ட­தா­க­வும் தெரி­வித்­தி­ருந்­தார்.

இது­கு­றித்து கருத்து தெரி­வித்­துள்ள ஷ்ருதி, தமது உழைப்­பால் பிரி­யங்கா பெரும் அற்­பு­தத்தை நிகழ்த்தி உள்­ள­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

“சினிமா துறை­யில் சம­மான ஊதி­யம் குறித்து எந்தப் பேச்­சும் எழு­வது இல்லை. எனி­னும் நாய­கர்­க­ளுக்கு இணை­யாக கதா­நா­ய­கி­க­ளுக்­கும் ஊதி­யம் கிடைக்­கும் நாள் விரை­வில் வர­வேண்­டும் என்று எதிர்­பார்க்­கி­றேன்,” என்­கி­றார் ஷ்ருதி.

‘கான்’ பட விழாவில் பங்கேற்ற தருணத்தை மறக்க இயலாது என்றும் வித்தியாச மான கலாசாரங்களை பிரதி பலிக்கும் நிகழ்வில் இந்தியா வின் பிரதிநிதியாக பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஷ்ருதி தெரிவித்துள்ளார்.

 சிம்புவின் 48வது

படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவது முடிவாகிவிட்டது. இப்படத்தின் நாயகியாக இந்தி நடிகை திஷா பதானி ஒப்பந்தமாகி உள்ளதாகத் தகவல். முன்னதாக இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகக் கூறப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!