ஆறு மொழிகளில் சரளமாகப் பேசுகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
அண்மையில் அவர் பங்கேற்ற படப்பிடிப்பின்போது, இடைவேளையில் இணையம் வழி ரசிகர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் பங்கேற்ற ராஷ்மிகா, தனது ரசிகர்கள் பலர் எழுப்பிய கேள்விகளுக்கு அவரவர் தாய் மொழியிலேயே பதிலளித்து அசத்தினார்.
இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைப் பாராட்டித் தள்ளியதுடன், எவ்வாறு இத்தனை மொழிகளைக் கற்றுக்கொண்டீர்கள் என்ற கேள்வியையும் கேட்க வைத்தது.
அதற்குப் பதிலளித்த ராஷ்மிகா, நடிப்பு மீது இருக்கும் ஆர்வத்தினால் பல மொழிகளையும் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
“மொழி தெரிந்திருந்தால்தான் காட்சிகளில் நடிப்பை தத்ரூபமாகக் கொண்டுவர முடியும். மொழி புரியாவிட்டால் நடிப்பதில் கொஞ்சம் சிரமம் இருக்கும். ரசிகர்களோடு அவரவர் சொந்த மொழியில் பேசுவதுதான் அவர்களுக்கு கொடுக்கும் மரியாதை என்று நான் நினைக்கிறேன்,” என்றும் ராஷ்மிகா மேலும் விளக்கம் அளித்தார்.
இதற்கிடையே, அவர் மேலும் இரு மொழிகளில் பேச பயிற்சி மேற்கொண்டுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

