அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜவான்’ இந்திப் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதில் நயன்தாரா நாயகியாக நடிப்பதும் பிரியாமணி, விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பதும் தெரிந்த சேதிகள்தான்.
இந்தி நடிகை தீபிகா படுகோன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் இந்தி நடிகை கியாரா அத்வானி இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி உள்ள தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக மூன்று நாள்கள் படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். அது மட்டுமல்ல, கியாரா அத்வானியே எதிர்பாராத சம்பளமும் கொடுக்கப்பட்டுள்ளதாம். இளையர்களைக் குறிவைத்து இப்பாடலை உருவாக்கி உள்ளார் இயக்குநர் அட்லீ.
எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் தேதி அன்று உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகிறது ‘ஜவான்’.


