சந்தானத்தின் சொத்து மதிப்பு

சந்தானத்தின் சொத்து மதிப்பு

1 mins read
87e7d016-a7db-4dfa-bc6d-5ec00a4cb50d
சந்தானம். - படம்: ஊடகம்

திரையுலகப் பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்து தமிழக ஊடகங்கள் தொடர்ந்து தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சந்தானத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.150 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது ஒரு படத்தில் நடிக்க அவர், ரூ.15 கோடி சம்பளம் பெறுவதாகவும் ரியல் எஸ்டேட், தங்கு விடுதி துறைகளில் முதலீடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இரண்டு சொகுசுக் கார்கள் வைத்திருப்பவர், தாம் முதலில் வாங்கிய காரையும் பத்திரமாக பாதுகாத்து வருகிறார்.

நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடிக்க அதிகபட்சமாக ரூ.3 கோடியை ஊதியமாகப் பெற்றார் சந்தானம். பின்னர் நாயகனாக மட்டுமே நடித்து வந்த அவர், விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த அஜித் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.

இதற்காக ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும் தகவல் வெளியானது. எனினும், அந்தப் படம் பின்னர் கைவிடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்