வட்டார கதையம்சம் கொண்ட ‘வட்டார வழக்கு’

வட்டார கதையம்சம் கொண்ட ‘வட்டார வழக்கு’

1 mins read
0edfd0f4-cd1b-4de1-a54a-83bc3335d421
வட்டார வழக்கு. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கி இருக்கும் ‘வட்டார வழக்கு’ படம் டிசம்பர் 29ஆம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்தில் சந்தோஷ் நம்பிராஜன் மற்றும் ரவீனா ரவி நடித்துள்ளனர். படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் காதல் வசனங்கள் இல்லாமல், காதலர்கள் நேரிலும் சந்திக்காமல் மலர்ந்த புதுவிதமான காதல் உணர்வை வெளிப்படுத்தும் வகையில், இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டிசம்பர் 29ஆம் தேதி இத்திரைப்படம் சக்தி ஃபிலிம் சிக்நேச்சர் நிறுவனத்தால் பெருமையுடன் வெளியிடப்படுகிறது.

இந்தப் படத்தில் விஜய் சத்யா, பருத்திவீரன் வெங்கடேஷ், சுப்ரமணியபுரம் விசித்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்