‘டங்கி’ படத்தை பட்டாசு வெடித்து வரவேற்ற ரசிகர்கள்

‘டங்கி’ படத்தை பட்டாசு வெடித்து வரவேற்ற ரசிகர்கள்

1 mins read
add17625-5520-4a59-bcf7-9c2edac108d4
‘டங்கி’ படத்தில் ஷாருக்கானுடன் டாப்ஸி பண்ணு, விக்கி கவுஷல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டங்கி’. இந்த படத்தில் ஷாருக்கானுடன் பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கவுஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் ராஜ்குமார் ஹிரானி மற்றும் கவுரி கான் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்

இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள திரையரங்குகளில் கூடிய ஷாருக்கான் ரசிகர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்று கொண்டாடினர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்