ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட செய்தியால் ரசிகர்கள் மகிழ்ச்சி

ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட செய்தியால் ரசிகர்கள் மகிழ்ச்சி

1 mins read
5405734b-1756-4c38-9916-d6fcd2981c63
சூர்யா, இயக்குநர் வெற்றிமாறன். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ‘வாடிவாசல்’ படத்தைப் பற்றிய செய்தியை வெளியிட்டிருக்கிறார். அதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் நேர்காணல் ஒன்றில், “வாடிவாசல்’ படத்தின் இசை எல்லாம் தயாராகிவிட்டது. வெற்றிமாறன் அவரின் படத்திற்கான பணிகளை முடித்த பின் ‘வாடிவாசல்’ படத்தின் பணிகளைத் தொடங்குவார். உங்களைப் போன்று நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று வெளியிட்டிருக்கிறார்.

அவருடைய இந்த அறிவிப்பால் ‘வாடிவாசல்’ படத்தில் இருந்து சூர்யா விலகவில்லை; அவர்தான் நாயகனாக நடிக்க இருக்கிறார் என்றும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்ற மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திஜி.வி.பிரகாஷ்