மீண்டும் ஒன்றுசேர்ந்த ‘திரிஷ்யம்’ கூட்டணி

மீண்டும் ஒன்றுசேர்ந்த ‘திரிஷ்யம்’ கூட்டணி

1 mins read
0d499f1a-b0ae-4bd7-b76a-af45649490e3
‘நெரு’ படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

2021ல் வெளியான ‘திரிஷ்யம் 2’ படம் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருக்கும் ‘நெரு’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.

இப்படம் டிசம்பர் 21 அன்று உலகெங்கும் வெளியானது. படத்தில் சாரா எனும் இளம் பெண், பார்வைக் குறைபாடு உள்ள மாற்று திறனாளி. அவர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகிறார். சிற்பக்கலை நிபுணரான சாரா, குற்றவாளியின் வடிவத்தை களி மண்ணில் செய்து தர, அதை வைத்து காவல்துறை, குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்துகிறது. ஆனால், குற்றவாளி ஜாமீனில் வெளி வந்து விடுகிறார்.

பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக விஜயமோகனாக நடித்திருக்கும் மோகன்லால் எனும் வழக்கறிஞர் முன்னிலையாகி வழக்கை சிறப்பாக வாதாடி நீதியை நிலைநாட்டுகிறார். விறுவிறுப்புக்குப் பஞ்சமின்றி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அவர்கள் எதிர்பார்த்ததைப்போல் ‘நெரு’ திரைப்படமும் நேர்மறை விமர்சனங்களுடன் வசூலைக் குவித்து வருகிறது. இதுவரை உலகெங்கும் ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக திரைப்பட வர்த்தகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்