அனந்திகா: ரஜினிகாந்துடன் நடித்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம்

நடிகர் ரஜினிகாந்துடன் ‘லால் சலாம்’ படத்தில் இணைந்து நடித்துள்ள நடிகை அனந்திகா சனில்குமார், இந்த வாய்ப்பை தனக்குக் கிட்டிய மிகப்பெரிய அதிர்ஷ்டமாகப் பார்ப்பதாகக் கூறியுள்ளார்.

சின்ன வயதில் இருந்தே தான் ஏ.ஆர். ரஹ்மான் பாடல்களைக் கேட்டு வளர்ந்ததாகக் கூறியுள்ள அனந்திகா, ரஜினி, ஏ.ஆர். ரஹ்மான் போன்ற மாபெரும் ஆளுமைகளுடன் பணியாற்றியது வாழ்க்கையில் என்றும் மறக்கமுடியாத அனுபவமாக விளங்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினியாட்டம் உள்ளிட்ட பலதரப்பட்ட நடனங்களைப் பயின்றுள்ள அனந்திகா, தற்போது கதகளியையும் கற்று வருகிறார்.

இளம்பருவம் முதல் இந்தக் கலைகளைப் பயின்று வருவதாகத் தெரிவித்துள்ள அவர், தற்போது ‘ப்ளஸ் 2’ தேர்வை எழுதவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அடுத்ததாக தெலுங்குப்படம் ஒன்றில் நடிப்பதற்கும் ஒப்பந்தமாகி உள்ள அனந்திகா, நயன்தாராவின் ‘அறம்’ போன்ற படங்களில் நடிப்பதற்கு ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’ திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அனைத்துலக அளவில் திரையரங்குகளில் வெளியீடானது.

அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் மூன்றாவது படமாக வெளியாகி உள்ள இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஷ்ணு விஷாலின் ஜோடியாக அனந்திகா நடித்துள்ளார்.

இவர் முன்னதாக தெலுங்கில் ‘ராஜமுந்திரி ரோஸ்மில்க்’ படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து ‘மேட்’, விக்ரம் பிரபுவுடன் ‘ரெய்ட்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்தது தன்னுடைய அதிர்ஷ்டம் என நெகிழ்ந்து போகிறார்.

சென்னையில் முதல் நாளில் முதல் காட்சியாக ‘லால் சலாம்’ படத்தை ரசிகர்களுடன் இணைந்து பார்த்தது குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தேர்த் திருவிழா, கிரிக்கெட் போட்டியை மையமாகக் கொண்டு இந்தப் படத்தின் கதைக்களத்தை உருவாக்கியுள்ளதாக படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ‘லால் சலாம்’ போன்ற ஒரு நல்ல கதையில் தனது பங்களிப்பும் இருப்பது மனதுக்கு உற்சாகம் அளிப்பதாகக் கூறியுள்ளார் அனந்திகா.

இதனிடையே, ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்ததும், என்னால் உடனடியாக நம்ப முடியவில்லை. இது கனவா இல்லை நனவா என என்னை நானே நம்பிக்கையில்லாமல் கிள்ளிப் பார்த்துக்கொண்டேன் என நடிகை நிரோஷா சுவாரசியமான தகவல்களைச் செய்தியாளர் சந்திப்பின்போது பகிர்ந்துள்ளார்.

“ரஜினியுடன் முன்பு நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பு நழுவிப் போனது. பல ஆண்டுகளாக நான் சினிமாவில் நடித்து வந்தாலும் ரஜினியுடன் நடிக்காமல் என்னுடைய சினிமா பயணம் ஒரு முழுமை அடையாதது போலவே நினைப்பேன். ஆனால், இப்போது ‘லால் சலாம்’ படத்தில் நடித்திருப்பதன் மூலம் எனது நடிப்பு வாழ்க்கை முழுமை பெற்றதாக உணர்கிறேன்.

“ரஜினியுடன் நடிப்பதற்கு இனியொரு முறை வாய்ப்பு கிட்டுமா என எதிர்பார்த்திருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

“ஒரு சூப்பர் ஸ்டாரின் மகளாக இல்லாமல் மிகவும் இயல்பாக, எளிமையாக படப்பிடிப்பில் ஐஸ்வர்யா பணியாற்றினார். எதையும் மேலோட்டமாக செய்யாமல் முழுவதுமாக இறங்கி வேலை பார்த்தார்.

“தனக்கு என்ன வேண்டுமோ அதில் ஐஸ்வர்யா மிகத் தெளிவாக இருப்பார். அவரைப் போன்ற பெண் இயக்குநரிடம் பணியாற்றியது எனக்குப் பெருமையாக உள்ளது,” எனக் கூறியுள்ளார் நிரோஷா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!