நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார்

‘பிதாமகன்’ படத்தில் லைலாவுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் விஸ்வே‌‌ஷ்வர ராவ் காலமானார்.

தமிழ் சினிமாவின் பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அண்மையில் நடிகர் சேஷு, நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்கள். அச்சோகத்தில் இருந்து மீண்டு வராமல் இருந்த திரையுலகம் அடுத்து மீண்டும் ஒரு நடிகர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளது.

பல படங்களில் துணை நடிகராகவும் நகைச்சுவை நடிகராகவும் நடித்து பிரபலமானவர் நடிகர் விஸ்வேஷ்வர ராவ். திடீர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார். இவருக்கு வயது 62.

தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். சுமார் 350 படங்களில் நடிகராகவும் 150 படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!