ஓடிடியில் வெளியாகும் ‘ராயன்’

ஓடிடியில் வெளியாகும் ‘ராயன்’

1 mins read
407bd310-4029-4aee-9b0d-0f43b2d089b4
நல்ல விமர்சனத்தை பெற்ற ‘ராயன்’ படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. - படம்: சமூக ஊடகம்
Google News Preferred Icon

தனுஷ், எழுதி, இயக்கி, நடித்த படம் ‘ராயன்’.

கடந்த ஜூலை 26-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தனுஷுடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன் என பலர் நடித்துள்ளனர்.

நல்ல விமர்சனத்தை பெற்ற இந்தப் படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் வரும் 23-ம் தேதி முதல் ‘ராயன்’ திரைப்படம் ‘அமேசான் ப்ரைம்’ ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்த அறிவிப்பை அமேசான் ப்ரைம் நிறுவனம் சமூக வலைத்தளப்பதிவில் பகிர்ந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்