கங்கனாவின் எமர்ஜென்சிக்குத் தடையா?

கங்கனாவின் எமர்ஜென்சிக்குத் தடையா?

1 mins read
6c462752-b3b5-4251-a2b4-51fec2c20d8d
படம்: - ஊடகம்
Google News Preferred Icon

கங்கனா ரணாவத் ‘எமர்ஜென்சி’ படத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகை கங்கனாவே எழுதி இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், எமர்ஜென்சி படத்திற்கு தடை விதிப்பது குறித்து தெலுங்கானா அரசு பரிசீலித்து வருவதாக அம்மாநில அரசு ஆலோசகா் முகமது அலி சபீா் கூறியுள்ளார். சீக்கியா் மதிப்பைக் குறைக்கும் வகையில் சில காட்சிகள் இப்படத்தில் இருப்பதால், சீக்கிய அமைப்பினா் இதற்குத் தடை விதிக்க கோரியுள்ளனா். அதனை பரிசீலிப்பதாக அம்மாநில முதல்வா் ரேவந்த் ரெட்டி வாக்குறுதி அளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
நடிகைதிரைப்படம்தடை