சுவாச சிகிச்சை தரும் டாக்டர் ராமநாதன்

கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிகப்பட்ட சிங்கப்பூரரான 54 வயது திரு தோ காய் கியாட், 42 நாட்கள் இரு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பியவர்.

வேலை காரணமாக பேங்காக் சென்று வந்த திரு தோவுக்கு காய்ச்சல் பல நாட்கள் நீடித்ததால் கூ டெக் புவாட் மருத்துவமனையில் மார்ச் 12ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். கொரோனா கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அவருக்கு ரத்தத்தில் உயிர்வளி (ஆக்சிஜன்) அளவும் ரத்த அழுத்தமும் குறையத் தொடங்கின.

கடுமையாகப் பாதிக்கப்பட்ட அவரது நுரையீரலை பல்வேறு சிகிச்சைகளிலும் சரிப்படுத்த முடியாத நிலையில், ‘எக்மோ’ (Extracorporeal Membrane Oxygenation life support- ECMO) சிகிச்சை வழங்க முடிவானது.

மருத்துவமனையின் மூத்த மருத்துவர் இணைப் பேராசிரியர் டாக்டர் கொல்லங்கோடு ரா. ராமநாதன் தலைமையிலான மருத்துவக் குழு மார்ச் 17ஆம் தேதி கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு வந்து திரு தோவுக்கு ‘எக்மோ’ சிகிச்சையை மேற்கொண்டது.

இந்த சிகிச்சை முறையில் ‘எக்மோ’ உயிர்க்காப்பு இயந்திரம், செயற்கை நுரையீரலாகச் செயல்படும். உடலில் பொருத்தப்படும் குழாய் மூலம் உடலிலுள்ள ரத்தம் வெளியில் எடுக்கப்பட்டு, உயிர்வளி சேர்க்கப்பட்டு மீண்டும் உடலுக்குள் செலுத்தப்படும். நுரையீரல் சீராகும் வரை சிகிச்சை நீடிக்கும்.

சிகிச்சையின் தொடக்கத்தில், திரு தோவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஒருபுறம் கூ டெக் புவாட் மருத்துவர்கள் இதய இயக்க மீட்பு சிகிச்சையை (CPR) மேற்கொள்ள, மறுபுறம் ரா. ராமநாதன் குழுவினர், திரு தோவின் நுரையீரலுடன் இதயத்திற்கும் ஆதரவு வழங்கும் வகையில் ‘எக்மோ’ இயந்திரத்தின் செயல்பாட்டை மாற்றி அமைத்தனர்.

உடல்நிலை சற்று சீரானதும் அதேநாளில் அவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஏழு நாள் ‘எக்மோ’ சிகிச்சையில் அவரது நுரையீரல் சீர்பெற்றது.

முழுமையாகக் குணமடைந்த திரு தோ, ஏப்ரல் 22ஆம் தேதி வீடு திரும்பினார்.

“நான் ஆரோக்கியமாக, துடிப்பான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுபவன். எனக்கே கிருமித்தொற்று ஏற்பட்டு, கடுமையாகப் பாதித்துவிட்டது. அதனால் தெரிந்தவர்களிடம் எல்லாம் மிகக் கவனமாக இருக்கும்படி வலியுறுத்துகிறேன். உயிர்பிழைத்தது பெரும்பாடு,” என்றார் திரு தோ.

‘’இந்த ‘எக்மோ’ சிகிச்சைமுறை சிக்கலானது, சவால்மிக்கது. இயந்திரத்தின் செயல்பாட்டையும் நோயாளியின் உடல்நலத்தையும் சிகிச்சை முடியும் வரை கூர்ந்து கவனிக்க வேண்டும். நோயாளியின் ஒட்டுமொத்த பராமரிப்பில் கிட்டத்தட்ட 50 மருத்துவ ஊழியர்களின் பங்கும் அடங்கியிருக்கிறது,” எனத் தெரிவித்தார் இதய தீவிர சிகிச்சை நிபுணரான டாக்டர் ராமநாதன்.

“எக்மோ சிகிச்சையில் அதிக அபாயம் உள்ளது. இந்த சிகிச்சையை அனுபவம் வாய்ந்த நிலையங்களில் மேற்கொள்வதே உகந்தது என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது,” என்றார் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை இதய தீவிர சிகிச்சை பிரிவின் இயக்குநர் இணைப் பேராசிரியர் கிரெம் மெக்கிரைவுன்.

தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையிலும் சிங்கப்பூர் பொது மருத்துவமனையிலும் மட்டுமே ‘எக்மோ’ சிகிச்சை வசதி உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!