உள்ளூர் படைப்பிலக்கிய விழாவில் தமிழ் நிகழ்ச்சிகள்

நூல் வெளியீடுகள், கருத்த­ரங்குகள், படைப்பாளர் சந்திப்பு, சுற்றுலாக்கள், மேடை நிகழ்ச்சிகள் போன்றவற்றுடன் வித்தியாசமான 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுடன் மார்ச் 8 முதல் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது 'உள்ளூர் படைப்பு இலக்கிய நூல்களை வாங்குங்கள்' (#பைசிங்லிட்) இயக்கம்.


இரு வாரயிறுதிகளில் நடை­பெறும் இந்த விழாவில் உள்ளூர் தமிழ் நூல்களைப் பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகளும் உண்டு.


சிங்கப்பூரின் கலாசார பதக்கம் பெற்ற மூத்த எழுத்தாளர் மா. இளங்கண்ணனின் 'வைகறைப் பூக்கள்' நாவலை மையமாக கொண்டு 'பார்வை 2019' எனும் மாறுபட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது நன்யாங் தொழில்­நுட்ப பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றம்.


இந்த நாவல் குறித்த கருத்­தரங்கு, கலந்துரையாடலுடன் நாவலின் சில காட்சிகளை நாடக­மாகவும் படைக்கின்றனர் இளை­ யர்கள். இந்த இரண்டு நாள் நிகழ்ச்சி மார்ச் 8, 10 ஆகிய தேதி­களில் தேசிய நூலக வாரி­யத்தில் நடக்கவிருக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். மேல் விவரங்களுக்கு https://buysinglit.sg/programme/parvaai-2019/ என்ற இணையத்தளத்தை நாடலாம்.

மற்றொரு நிகழ்ச்சியாக பி.கிருஷ்ணன், இராம கண்ண­பிரான் போன்ற மூத்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை நாடக வடிவில் படைக்கிறது 'சிங்கப்பூர் இந்திய திரைப்பட, நாடக ஆர்வலர்கள்' (சிட்ஃபி) அமைப்பு. மார்ச் மாதம் 9, 10 ஆகிய தேதி­களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேசிய நூலக வாரி­யத்தில் நிகழ்ச்சி நடைபெறும். இலவச நுழைவுக்கு https://tinyurl.com/vaangernadikalaam என்ற இணையத்தளத்தை நாடலாம்.


'அவாண்ட்' நாடகக்குழுவின் 'நம்மவர்' நிகழ்ச்சியில் படைப்­பாளரும் செய்தியாளருமான லதாவின் சிறுகதைகளின் மேடை வாசிப்புடன் கதைகள் குறித்த கருத்துப் பரிமாற்றமும் இடம்­ ­பெறும். மலாய் மரபுடைமை நிலை­யத்தில் மார்ச் 9ஆம் தேதியன்று மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை முதல் நிகழ்ச்சியும் இரவு 7 முதல் 8.30 மணி வரை இரண்டாம் நிகழ்ச்சியும் நடை­பெறும். $15 மதிப்புள்ள நுழைவுச்­ சீட்டுகளுக்கு https://nammavar.eventbrite.sg/ என்ற இணையத்­தளத்தை அல்லது admin@avanttheatre.com என்ற மின்னஞ்சல் முகவ­ரியைத் தொடர்பு­கொள்ளலாம்.

'பிளேக் ஸ்பைஸ் மீடியா' நிறுவனம், உள்ளூர் தமிழ் சிறு­கதைகளை வைத்து திரைக்­­ கதைகள் எழுதும் முறைகளைக் கற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சி ஒன்றும் பைசிங்லிட் விழாவில் இடம்பெறும். 'திரைக்கதை எழு­துதல்' என்ற தலைப்பில் நடத்­தப்­ படும் இந்த ஒரு நாள் பயில­­ரங்கு, உள்ளூர் தமிழ் எழுத்து வடிவங்­ ­களைப் படிக்க ஒரு வாய்ப்பாக அமையும். பொது­மக்களுக்கு இல­வசமாக வழங்கப்­ படும் இந்த நிகழ்ச்சி மார்ச் 16ஆம் தேதியன்று தெம்பனிஸ் வட்டார நூலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். https://tinyurl.com/writingscreenplayin­tamil என்ற இணையத்தளத்திற்குச் சென்று இப்பயிலரங்கிற்கு விண்ணப்­பிக்கலாம்.

23 உறுப்பினர்கள் அடங்கிய பணிக்குழு வழிநடத்தும் இந்த நிகழ்ச்சிக்கு தேசிய கலைகள் மன்றம் ஆதரவளித்து வருகிறது.


அண்மைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் இவ்வாண்டு கூடு­தலாக இன்னொரு வாரயிறுதி­ யிலும் இவ்விழா நடைபெறும். இவ்விழா உள்ளூர் பதிப்பாளர்கள், சில்லறை வர்த்தகர்கள், லாப நோக்கமற்ற நிறுவனப் பிரதி­நிதிகள் ஆகியோரின் நிகழ்ச்சி­ களுக்கு ஒரு தளமாக அமையும்.


'#பைசிங்லிட்' பற்றிய மேல் விவரங்களுக்கு https://buysing­ lit.sg/ என்ற இணையத்தளத்தை நாடலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!