உள்ளமும் உடலும் நீ பாதி நான் பாதி

திரு ஆறுமுகம் தன் மனைவியான திருமதி சரஸை கைப்பிடித்து 40 ஆண்டு கள் ஆகிவிட்டன.  
 ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி வந்தால் அன்பர் தினத்தில் தன் மனைவிக்கு நகையையோ, பூவையோ அளித்து  புன்னகையுடன் அன்பை திரு ஆறுமுகம் பரிமாறிக்கொள்வது வழக்கம். 
ஆனால் அவர் இந்த ஆண்டு தன் மனைவிக்கு அளித்து இருக்கும் பரிசு விலைமதிப்பு இல்லாதது, அன்பு உள்ளங் களுக்கு அடையாளமாகத் திகழ்வது, ஈடுஇணை இல்லாதது.
திரு ஆறுமுகம், சிறுநீரகக் கோளாறு காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்ட  தன் மனைவிக்குத் தன்  சிறுநீகரத் தையே கொடுத்து இருக்கிறார். ஆழ்ந்த அன்புக்கு அடையாளமாக இருக்கும் இந்தப் பரிசு, இருவருக்கும் நிம்மதி பெருமூச்சையும் வரவழைத்து இருக்கிறது. 
ஐந்து ஆண்டுகளுக்கு முன்  
கணவரின் அன்புடன் அவரின்  சிறு நீரகத்தையும் பகிர்ந்துகொண்டு திருமதி சரஸ் நன்கு குணமடைந்து உள்ளார்.
1980களில் புதிகாக ஈசூனில் கட்டப்பட்ட அடுக்குமாடி வீட்டில் குடியேறிய பின்னர் ஈசூனில் பூக்கடை வியாபாரத்தை நடத்தி திரு ஆறுமுகம் தம்பதியர் வருகிறார்கள். 
இரு பிள்ளைச் செல்வங்களைப் பெற்று வாழ்க்கையில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகளை எல்லாம் சந்தித்து அவற்றைத் திறம்பட கடந்துவந்து இருக்கிறார்கள். 
ஐந்து ஆண்டுகள் முன்பு வரை  வாழ்க்கை அருமையாக நகர்ந்தது. பிறகு ஒரு நாள் ரத்த அழுத்தம் குறைந்து போனதால் திருமதி சரஸ் மருத்துவரை காணச் சென்றார். அங்குதான் அதிர்ச்சி தலைகாட்டியது. 
திருமதி சரஸ் ‘பாலிசிஸ்டிக்’ சிறுநீரக நோய் (polycystic kidney disease) எனப்படும் ஒருவகை நோயால் பாதிக்கப் பட்டு இருக்கிறார் என்பது தெரியவந்தது.
ஒருவருக்கு அந்த நோய் வந்தால், சிறுநீரகத்தில் கட்டிகள் உருவாகி, சிறு நீரகம் வீங்கும். காலப்போக்கில் சிறுநீரகம் செயல் இழந்துவிடும். திருமதி சரஸ், மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை முறையாக உட்கொண்டுவந்தார்.
ஆனால் சிறுநீரகங்கள் குணமடைய வில்லை. இப்படி இருக்கையில், திருமதி சரஸ் ரத்தச் சுத்திகரிப்புச் சிகிச்சைக்குச் (dialysis) செல்லவேண்டும் என்று சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் மருத்துவர் பரிந்துரைத்தார். இருந்தாலும் அதற்குச் செல்ல திருமதி சரஸ் விரும்பவில்லை. 
காலம் இப்படியே ஓடியதால், கடந்த ஆண்டு அவருடைய சிறுநீரகங்களின் இயக்கம் மோசமடைந்தது. அதனை அடுத்து குடும்பத்தினர் மருத்துவரைச் சென்ற ஆண்டு சந்தித்தனர். 
திருமதி சரசின் சிறுநீகரங்கள் இனிமேல் செயல்படாது என்று மருத்துவர் தெரிவித்துவிட்டார். உடனே மாற்றுச் சிறுநீரகம் பொருத்த வேண்டும். இல்லை எனில் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும் என்றும் மருத்துவர் எச்சரித்துவிட்டார்.  
குடும்பத்தினர் தங்கள் சிறுநீரகத்தைத் தானம் செய்ய முன்வந்தனர். ஆனால்  தானமாகக் கிடைக்கும் சிறுநீரகம் திருமதி சரசுக்குப் பொருந் தினால் மட்டுமே அவரின் உடலில் அது வேலை செய்யும். 
தலையாய கடமை
“அப்பாவுக்கு அம்மாவின் மீது கொள்ளை பிரியம். ஆனால் அவர் தனது உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டார். தமக் குள்ளேயே புதைத்துவிடுவார். மருத்துவர் சொன்னதைக் கேட்டதுமே, எப்படியாவது தன் மனைவியைக் காப்பாற்றிவிடவேண்டும் என்பதைத் தன் தலையாய கடமையாக தந்தை கருதினார்,” என்றார் இந்தத் தம்பதியரின் மகளான திருமதி உமாவதி, 39.
இந்த சிகிச்சையில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதை எல்லாம் இந்தத் தம்பதியர் உணர்ந்திருந்தாலும் ‘எது நடந்தாலும் பார்த்துவிடுவோம்’ என்ற உறுதியுடன் இருந்தனர்.
தன் மனைவிக்குத் தன் சிறுநீரகம் பொருந்துமானால் அதை அவருக்குப் பொருத்தும்படி திரு ஆறுமுகம் மருத்து வரிடம் தெரிவித்தார். அதனை அடுத்து திரு ஆறுமுகம்,  கடந்த ஆண்டின் நடுவில் பல மருத்துவச் சோதனைகளுக் குச் செல்லவேண்டியதாயிற்று. 
அதன் காரணமாக அவர் நடத்தி வந்த பூக்கடை வியாபாரமும் பாதிப்படைந் தது. இருந்தாலும் சக குடும்ப உறுப் பினர்கள்  அவருக்குப் பக்கபலமாக இருந்து ஆதரவு தந்தார்கள்.
“அந்தச் சூழ்நிலையிலும் நான் பதற்ற மடையவில்லை, நிதானமாகத்தான் இருந் தேன். பலமுறை கடையை அடைத்து விட்டு மருத்துவப் பரிசோதனைகளுக்குச் செல்லவேண்டி இருந்த என் கணவருக் குத்தான் இது சவால்மிக்க தருணமாக இருந்தது. 
“என்னை இழந்துவிடக்கூடும் என்ற ஐயம் குடும்பத்தினரிடம் இருந்தாலும் அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல் எனக்கு ஆதரவாக இருந்து என்னை மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பல தடவை அவர்கள் இடைவிடாது அழைத் துச் சென்றனர்,” என்று திருமதி சரஸ் தெரிவித்தார். 
பொருந்தியது உடல் உறுப்பு
திரு ஆறுமுகத்தின் சிறுநீரகம் அவரின்  மனைவிக்குப் பொருத்தமாக இருக்கிறது என்பது, பல மருத்துவச் சோதனைகளை அடுத்து ஆறு மாதங் களுக்குப் பிறகு தெரியவந்தது. அதனை அடுத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி கிடைத்தது.
“என் சிந்தனை எல்லாமே சிறுநீரகம் என் மனைவிக்குப் பொருந்துமா என்பதில் தான் இருந்தது. எத்தனையோ மருத்துவச் சோதனைகளுக்குச் செல்லவேண்டி  இருந்தாலும் நான் என் நம்பிக்கையைக் கைவிடுவதாக இல்லை. 
“ஆரம்பகால சோதனையில் சுமார் 60% விழுக்காடு பொருத்தம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டபோது, நம்பிக்கை பிறந்தது. மற்றவற்றை இறைவன் பார்த் துக்கொள்வார் என்று நம்பினோம்,” என்று தெரிவித்தார் கணவர் திரு ஆறுமுகம்.
மறுவாழ்வு கிடைத்தது
திருமதி சரஸ`க்கு உள்ளூர் மருத்து வமனை ஒன்றில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை வெற்றிகரமாக ஆனது. சிகிச்சைக்குச் சுமார் $20,000 செலவாகியது. பாதித் தொகையை ‘மெடி சேவ்’ என்ற மருத்துவச் சேமிப்புக்  கணக் கிலிருந்து செலுத்த முடிந்தது.
இப்போது இத்தம்பதிக்கு வாழ்க்கை வழக்க நிலைக்குத் திரும்பி உள்ளது. என்றாலும் திருமதி சரஸ் தமது உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார்.
திருமதி சரஸ் தனக்குக் கிடைத்த மறுவாழ்வாக இதனைக் கருதுகிறார். கணவர், பிள்ளைகள் பேரப்பிள்ளை      களுடன்  மகிழ்ச்சியாக வாழ்கையைத் தொடர்கிறார்.
“இல்லற வாழ்க்கையில் அர்ப்பணிப்பு மட்டும் அடங்கி இருக்கவில்லை. விட்டுக் கொடுத்து வாழ்வதில்தான் உறவு அர்த்த முள்ளதாகிறது. தற்பெருமை பிரிவுக்குத் தான்  இட்டுச்செல்லும். 
“பொறுமையைக் கடைப்பிடித்து, போராடும் குணத்துடன் வாழ்க்கையின் சவால்களை ஒன்றாகச் சந்திக்கும் மனப் பக்குவத்தை வளர்த்துக்கொள்ளவேண் டும்,” என்று வலியுறுத்தி கூறுகிறார்கள்   இன்னமும் காதலால் கட்டுண்டு உள்ள  ஆறுமுகம்-சரஸ் காதல் ஜோடியினர். 
2019-02-24 06:00:00 +0800