விருது வென்ற டாக்டர் ரவீந்திரன்

மிட்சுயி சுமிடோமோ காப்புறுதி நல்வாழ்வு சங்கம் (எம்எஸ்ஐடபிள் யூஎஃப்) கடந்த மாதம் 21ஆம் தேதியன்று 12ஆம் முறையாக அதன் ஆராய்ச்சி மானிய விருதுகள் வழங்கும் விழாவை நடத்தியது.
முதியோருக்கான பராமரிப்பை மேம்படுத்துவது, சமூக ஆதரவை வலுப்படுத்துவது ஆகிய அம்சங்களை மையமாக கொண்ட ஆராய்ச்சிகள் இந்த ஆண்டின் விழாவில் அங்கீகரிக்கப்பட்டது. இவ்விருதை வென்ற வர்களில் 41 வயது டாக்டர் ரவீந்திரன் கணேஷ்வரனும் ஒருவர்.  
சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் நிலையத்தில் மூத்த ஆலோச கராகப் பணிபுரியும் டாக்டர் ரவீந்திரன்  முதிய புற்றுநோய் நோயாளிகளுக்கான பராமரிப்பை மேம்படுத்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். ‘ஜரியேடிரிக்’ சிகிச்சை எனப்படும் முதியவர் களுக்கான சுகாதாரப் பராமரிப்பு முறையில் முழுமையான மதிப்பீட்டு முறையைத் தயாரித்து வருகிறார் அவர். 
“குழந்தைகளுக்கும் சிறாருக் கும் ‘பிடியேடிரிக்ஸ்’ எனப்படும் சிறப்பு மருத்துவ முறை உண்டு. ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதைத் தாண்டிய பிறகு அனைவருக்கும் ஒரே மாதிரியான மருத்துவம் வழங்கப்படுகிறது. ஆனால் 65 வயதைத் தாண்டியவர்களுக்கு அத்தகைய சிகிச்சையை அளிக்க முடியாது. 
“முதுமையில் சிலர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், நினைவாற்றல் இழப்பு போன்ற பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்,”
“2030ஆம் ஆண்டுக்குள் நான்கு சிங்கப்பூரர்களில் ஒருவர் 65 வயதை தாண்டியவராக இருப்பார் என்று புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. ஒரு மில்லிய னுக்கும் மேற்பட்ட மக்கள் முதியவர் பிரிவில் இருப்பார்கள். தற்போது மிக ஆபத்தான உயிர்கொல்லி நோயாக புற்றுநோய் இருக்கிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பாய லேபார் ஆகாயப் படை தளத்தில் காணப்படும் மேஜர் ஆறுமுகம் சிவராஜ், 32. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

16 Jun 2019

தேசிய தின அணிவகுப்பில் போர் விமானி மேஜர் ஆறுமுகம்

‘எ குட் ஸ்பேஸ்’ அமைப்பின் வகுப்பறையில் நடைபெறும் ஆங்கிலப் பாட வகுப்பை குமாரி அ.ஆர்த்தி, குமாரி வைஷ்ணவி நாயுடு (நடுவில்) ஆகியோர் வழிநடத்துகின்றனர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், வெங்கடேஷ்வரன், வுமன் ஆஃப் சக்தி

16 Jun 2019

சக்தி கொடுக்கும் ‘சக்தி’