சுடச் சுடச் செய்திகள்

பிள்ளை வளர்ப்பில் கூடுதல் உதவி

எஸ்.வெங்கடேஷ்வரன்
வைதேகி ஆறுமுகம்

கைக்குழந்தைகள், குழந்தைகளை வைத்திருக்கும் வேலைக்குச் செல் லாத தாய்மாருக்கு குழந்தைப் பராமரிப்பு  நிலைய கட்டண மானிய காலம் நீட்டிக்கப்படும்.
குடும்ப வருமானம் $7,500 அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், அவர்களுக்கு கூடுதல் மானியம் கிடைக்கும். இந்த மாற்றங்களின் வழி, 5,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன் பெறும்.
இவ்வாண்டு மார்ச் 1ஆம் தேதி யிலிருந்து வேலைக்குச் செல்லாத தாய்மார்கள் குழந்தை பராமரிப்பு நிலைய கட்டண மானியமாக $300 பெறுவர். இவர்கள் கைக் குழந்தை பராமரிப்பு நிலையக் கட் டண மானியமாக $600 பெறுவர்.
தற்போது மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும் இந்த மானியம் ஆறு மாத காலத்துக்கு நீட்டிக்கப் பட உள்ளது.
மேலும், குடும்ப வருமானம் $7,500 அல்லது அதற்கும் குறை வாக இருந்தால், $100 முதல் $540 வரையிலான கூடுதல் மானி யத்தையும் இவர்கள் ஆறு மாத காலத்திற்கு பெறுவர்.
வேலை செய்யாத இரண்டு குழந்தைகள் கொண்ட  தாய்மார் இத்திட்டம் மூலம் பயன்பெறுவர்.
உதாரணத்திற்கு இரண்டு வயது அல்லது அதற்கு கீழ்பட்ட இளைய குழந்தையைப் பராமரிக் கும் தாயாருக்கு, அவர்களது இளைய குழந்தை இரண்டு வய தாகும் வரை, மூத்த குழந்தைக்குத் தொடர்ந்து குழந்தை, கைகுழந்தை பராமரிப்பு மானியம் கிடைக்கும்.  
தற்போது இளைய பிள்ளைக்கு 18 மாதமாகும் வரையே மானியம் வழங்கப்படுகிறது. 
குடும்ப வருமானத்தைப் பொறுத்து மாதத்திற்கு $540 வரையிலான கூடுதல் மானியத் திற்கும் அவர்கள் தகுதிபெறலாம். இந்த மானியங்களுக்கு ஒற்றைப் பெற்றோரும் தகுதி பெறுவர்.
மாத வருமானத்தைக் கருத்தில் கொள்ளாது வேலைக்குச் செல் லாத அனைத்துத் தாய்மார்களுக் கும் $150 குழந்தைப் பராமரிப்பு, கைக்குழந்தைப் பராமரிப்பு நிலையக் கட்டண அடிப்படை மானியம் வழங்கப்படுகிறது.

கணவர் தாமஸ் ஐசக், பிள்ளைகள் மார்க்ஸ், மத்தியாஸ், சாமுவேல் (அம்மாவின் கையில் இருப்பவர்), மகள் ஷெரபினாவுடன் ஷாமளா. படம்: ஷாமளா
2019-03-17 06:00:00 +0800

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon