பிள்ளைகளோடு வளரும் தமிழ் 

பாலர் பள்ளியில் படித்துக்கொண்டி ருந்த மகன் இஸ்வரா ஆதித்யா தமிழ் படிக்க சிரமப்பட்டார். அவருக்கு தமிழ் கற்றுக்கொடுக்க விரும்பிய தாயார் தீபாவிற்கு எப்படி, எதைக் கற்றுக்கொடுப்பது என்று தெரியவில்லை. அதனால் மகனின் வகுப்புக்கு நேரடியாகச் சென்று பார்த்தார். அட்டைகளில் எழுதிய சொற்களைக் கொண்டு ஆசிரியர் சொல்லிக்கொடுத்த முறையைப் பின்பற்ற விழைந்த தீபா தாமே சொல் அட்டைகளை (ஃபிலேஷ் கார்ட்ஸ்) உருவாக்க லாமே என்று நினைத்தார். 
இணையத்திலிருந்து படங் களைப் பதிவிறக்கம் செய்து ‘கார்ட்போர்ட்’ அட்டைகளில் ஒட்டி அதன்கீழ் எழுத்துகளை எழுதி தீபா தயாரித்த சொல் அட்டைகள் மகன் இஸ்வராவின் தமிழ் ஆர்வத்தை வெகுவாக வளர்த்தது. 
அவன் சொற்களை விரும்பிப் படிக்க தொடங்கினான். அவனு டைய ஆர்வத்திற்கு தீனி போடும் வகையில் தீபா தொடர்ந்து பல சொல் அட்டைகளை உருவாக் கினார். 
தமிழ் கற்றலுக்கு உதவும் துணைக் கருவிகள், விளையாட்டு கள், மேலும் தமிழ்ச் சொற்களை பல்வேறு வழிகளில் சிறார்களுக் கும் தமிழ் தெரியாதவர்களுக்கும் அறிமுகப்படுத்தும் குவளைகள், பென்சில்கள், டி சட்டைகள் போன்ற பொருட்களை விற்கும் ‘தமிழ்வித்லவ்’ என்ற நிறுவனத்தை தொடங்க தீபாவிற்கு அடிப்படை யாக இருந்தது இந்த சொல் அட்டைகள். 
“மகனுக்கு சொல்லித்தர சொல் அட்டைகளைக் கடைகளில்தான் முதலில் தேடினேன். பிரபல நிறு வனம் ஒன்றில் 40 சொல் அட்டை களை $30க்கு வாங்கினேன். நாற்பது சொற்களையும் மீண்டும் மீண்டும் படிக்க மகனுக்குச் சலிப்பு தட்டியது. தொடர்ந்து அவ்வளவு விலை கொடுத்து வாங்குவதைவிட நானே தயாரிக்க நினைத்தேன்,” என்ற 36 வயது தீபா ஆஷா தேவி தமது சொல் அட்டைகளின் தொடக்கத்தை விவரித்தார்.