சுடச் சுடச் செய்திகள்

சொற்சிலம்பம் 2019: வாகை சூடியது ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரி

‘நம் மெர்டேக்கா (முன்னோடி) தலைமுறையினரைப் போலன்றி இன்றைய இளைய தலைமுறையினர் சவால்களை எதிர்கொள்ளும் வலிமையற்றவர்களாக உள்ளனர்’ என்ற தலைப்பில் காரசாரமாக விவாதம் செய்து சொற்சிலம்பம் 2019 மாபெரும் இறுதி சுற்றில் வெற்றி வாகை சூடியது ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரி.
அந்த சுற்றின் சிறந்த  பேச் சாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டர்சன் சிராங்கூன் தொடக் கக்கல்லூரி மாணவி  ஜோன் கிளமன்ட் மெலின்டா ஜோஷல், 16,  தமது கடுமையான உழைப் புக்குப் பலன் கிடைத்துள்ளது என்றார். 
தொடக்கக்கல்லூரிகள், பல துறைத் தொழிற்கல்லூரிகள், மத்தியக் கல்விக் கழகங்கள், ஐபி திட்டக் கழகங்கள் ஆகிய வற்றின் மாணவர்களுக்காக   நடத்தப்பட்ட தேசிய தமிழ் விவாதப் போட்டியின் இறுதிச் சுற்று நேற்று நடந்தது. அதில்   நீ ஆன் பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரியும்  ஆண்டர்சன் சிராங் கூன் தொடக்கக்கல்லூரியும் மோதின. 
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரி, கொடுக்கப் பட்ட தலைப்பை வெட்டியும்  நீ ஆன் பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி ஒட்டியும் பேசினர். 
ஒவ்வொரு குழுவிலும் 6 மாணவர்கள் இருந்தனர். அவைத் தலைவர் வடிவழகன் பி.வி.ச.சு போட்டியை வழிநடத்தினார்.
போட்டியின் நடுவர்களாக வானொலி படைப்பாளர் சிவரஞ் சினி குணசேகரன், முனைவர் இளவழகன், மூத்த மாவட்ட நீதிபதி பாலா ரெட்டி ஆகியோர் வந்திருந்தனர். மக்கள் கழக நற்பணிப் பேரவையும் வடமேற்கு வட்டார இந்தியர் நற்பணிச் செயற்குழுக்களும் வசந்தம் ஒளிவழியும் இணைந்து ஏற்பாடு செய்த  இப்போட்டிக்கு தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும் வளர்தமிழ் இயக்கமும் ஆதர வளித்தன. மீடியாகார்ப் வளாகத் தில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் செம்பவாங் குழுத்தொகுதி  நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon