சுடச் சுடச் செய்திகள்

நகைச்சுவை மூலமாகத் தமிழாற்றல்: சொல்லி அடித்து வரும் கெல்லி

இணையத்தில் நகைச்சுவைக் காணொளி களை வெளியிட்டு பிரபலமானவர் குமாரி கெல்லி கனகா, 29. ஈராண்டு களுக்கு முன் தமிழ்மொழியில் நகைச் சுவைக் காணொளிகளை இவர் வெளி யிடத் தொடங்கியபோது கடும் விமர் சனங்களை எதிர்கொண்டார். 
அந்த முயற்சியின் தொடக்கக் கட் டத்தில் தமிழைப் பயன்படுத்திய அனு பவம் அதிகம் இல்லாத நிலையில் இருந் ததாக குமாரி கனகா குறிப்பிட்டார்.
“ஆனாலும் தமிழ் நகைச்சுவையை மிகவும் விரும்பினேன். தமிழில் சரள மாகப் பேச முடியாத அக்காலகட்டத்தில், நான் சரியான சொற்களைப் பயன்படுத் துவதில்லை என்று பலர் குறைகூறினர். தமிழில் பேச முடியாதபோது தமிழில் காணொளிகளைத் தயாரிப்பது ஏன் என்று என்னை ஊக்கமிழக்கச் செய்யும் வண்ணம் பலர் பேசியதுண்டு,” என குமாரி கெல்லி நினைவுகூர்ந்தார். 
“இரு மாதங்களுக்குமுன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பரா சத்தி திரைப்படத்தில் இடம்பெற்ற நீதிமன்றக் காட்சி ஒன்றை நகைச்சுவைக் காட்சியாக மாற்றி வடிவமைத்து, நடித்து காணொளி ஒன்றைப் பதிவு செய்தேன். அந்தப் படத்தில் நடிகர் திலகத்தின் தமிழ் மிகவும் உயர்ந்த நிலையில் இருக் கும். அந்தக் காணொளியைத் தயாரித்து முடித்ததும் என் தமிழாற்றலைக் கண்டு நானே வியப்படைந்தேன்,” என்றார் இவர். 
அரிதாகத் தமிழ் பேசும் குடும்பச் சூழலில் வளர்ந்தவர் இவர். அதுபோக உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்த பின் ஏறத்தாழ பத்தாண்டுகாலம் இவரது தமிழ்ப் புழக்கம் நின்று போயிற்று. 
“நான் பலதுறைத் தொழிற்கல்லூரி யில் சேர்ந்தபோதே தமிழில் பேசுவதை நிறுத்திவிட்டேன். உடன் படித்தவர்களில் எவரும் தமிழில் பேசியது இல்லை. வீட்டிலும் என் குடும்ப உறுப்பினர்கள் தமிழில் சரளமாக பேச முடியாததால் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே உரை யாடினேன். தமிழ் நீண்டகாலத்திற்கு என்னைவிட்டுப் போனது,” என்று இவர் வருத்தத்துடன் கூறினார். 
2017ஆம் ஆண்டில் பொழுதுபோக்குத் துறையில் காலெடுத்து வைத்த இவர், கடந்த ஈராண்டுகளாக ஒவ்வொரு வார மும் தமிழில் நகைச்சுவைக் காணொளி களைத் தயாரித்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். பெரும் பாலும் வேடிக்கையான இந்தியத் தாயார் கதாபாத்திரத்தில் தோன்றி, நகைச் சுவைக் காணொளிகளை உருவாக்கி பகிர்ந்துள்ளார். அதோடு, சமூக கருத்து களைப் பகிரும் வகையில் ‘கேன் வீ ஜஸ்ட் டாக்’ என்ற காணொளி மூலமும் இவர் பிரபலமடைந்து வருகிறார். 
“தமிழை வாழவைக்க என்னைப் போல் முயற்சி எடுக்கவேண்டும் என்பது அவசியமில்லை. தமிழர்கள் தங்களுக் குள் தமிழில் பேசினாலே போதும், தமிழ் வாழும் மொழியாக நிலைத்திருக்கும்,” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் குமாரி கெல்லி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon