முத்தமிழ் மணம்  பரப்பிய தமிழர் திருநாள் 

இயல், இசை, நடனம், நாடகம், தமிழ்ப் பேச்சு என பல்சுவை நிகழ்ச்சியாக தமிழ் விருந்தளித்தது மாதவி இலக்கிய மன்றத்தின் 'தமிழர் திருநாள்'.
கிட்டத்தட்ட 500 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பிரபல உள்ளூர் தமிழ்ப் பேச்சாளர் கள் ஜோதி மாணிக்கவாசகமும் ஜி.இராஜகோபாலனும் சிறப்பு உரைகள் ஆற்றினர்.
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையின் சிறப் புகள் பற்றி 'அறச்செல்வி மணிமேகலை' என்ற தலைப்பில் சுவைசொட்டப் பேசினார் தமிழ் மொழி ஆர்வலரும் ஸ்ரீவிநாயகா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர் வாக இயக்குநருமான திரு மாணிக்கவாசகம்.
"இளையர்களுடன் தமிழ்மொழி பிணைப்பை ஏற்படுத்த தமிழ் இலக்கியங்களின் அழகையும் சிறப்பையும் சொல்வது போல் அந்த இலக்கியங்கள் கூறும் பண்புகள் இன்றைய வாழ்க்கை முறையோடு ஒத்துபோகிறது என் பதை எடுத்து சொல்வதும் முக் கியம். இவ்வாண்டின் தமிழ்மொழி மாதம், பல இளையர் நிகழ்ச்சி களுடன் சரியான இலக்கை நோக்கிச் செல்கிறது.
"இதுபோன்ற நிகழ்ச்சிகளுக் குச் சென்று நாளைய தலைவர் களாகவிருக்கும் இன்றைய இளை யர்களுக்கு ஆதரவு கொடுங்கள். உங்களுடைய உற்சாகம்தான் அவர்களை தமிழின் பக்கம் இழுக் கும்.
"இளையர்கள் மீது குற்றம் சாட்டுவதை நிறுத்திவிட்டு அவர் களுக்கு எப்படி ஊக்கம் தரலாம் என்பதை பற்றி யோசித்து பாருங் கள்," என்றார் திரு மாணிக்க வாசகம்.
'விழைந்ததும் விளைந்ததும்' என்ற தலைப்பை ஒட்டி ஆழமான கருத்துகளைப் பகிர்ந்துகொண் டார், திரு இராஜகோபாலன்.
"வழக்கமாக தமிழகம் அல்லது மலேசியாவைச் சேர்ந்த பேச்சாளர் கள் கலந்துகொள்வதற்குப் பதி லாக, சிங்கப்பூரின் திறன் படைத்த உள்ளூர் பேச்சாளர்களைப் பேச்சு நாயகர்களாக ஊக்குவிப்பது இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்" என்றார் மாதவி இலக்கிய மன் றத்தின் தலைவர் டாக்டர் என்.ஆர்.கோவிந்தன்.
நிகழ்ச்சியில் மூத்த தொழிற் சங்கவாதியும் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினருமான டாக்டர் ஹோ கா லியோங், மசெக ஜூரோங் கிளையின் முன்னாள் செயலாளர் திரு டான் சுவான் சியான், திரு முகைதீன் ஆகி யோருக்கு வாழ்நாள் சாதனை யாளர்கள் விருதுகள் வழங்கப் பட்டன.

கிட்டத்தட்ட 500 பேர் கலந்துகொண்ட இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ கலந்துகொண்டார். இந்திய இசையுடனும் சீன சிங்க நடனத்துடனும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
படங்கள்: நாதன் போட்டோ & வீடியோ ஸ்டூடியோ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!