பரோட்டா கடைக்காரர்களின் இரவு நேர சவால்கள்

எஸ்.வெங்கடேஷ்வரன், டேவிட் சன்

நள்ளிரவைத் தாண்டியும் கடையில் கூட்டம் நிறைந்திருக்கிறது.
கிளார்க் கீ பகுதியின் கேளிக்கைக் கூடங்களுக்குச் சென்றுவிட்டு சர்கியுலர் சாலையில் ஒளிரும் விளக்குகளுடன் பரபரப் பாக இயங்கிக்கொண்டிருக்கும் 'நியூ அலாம் ‌‌ஷா' உணவகத்திற்கு பரோட்டா சாப்பிட வருகிறார்கள்.
பலர் சாப்பிட்டுவிட்டு வந்த சுவடு தெரியாமல் கிளம்பினாலும், சிலர் அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களோடு தகறாறு செய்கிறார்கள்.
இந்த உணவகம் பல பிரச்சி னைகளைச் சமாளித்து வந்திருக் கிறது என்றார் கடந்த 15 ஆண்டு களாக உணவகத்தை நிர்வகித்து வரும் முகம்மது கமாலுதீன் பாபு ஹுசைன், 44.
"பரோட்டா கடைக்காரர்களின் வாழ்க்கை சிரமமானது. இந்த வட் டாரத்தில் கேளிக்கைக் கூடங்கள் இருப்பதால், மது போதையில் பலர் வருவார்கள். சிலர் பிரச்சினை செய்வார்கள்," என்றார் அவர்.
இந்தக் கடையில் சண்டை சம்பவங்கள் பல நடந்துள்ளன. சிங்கப்பூர் நிரந்தரவாசியான திரு கமாலுதீனும் அவரது ஊழியர்களும் துன்புறுத் தப்பட்டுள்ளனர்.
இந்தச் செய்திக்காக அவருடன் பேசிக்கொண்டிருந்தபோதுகூட, சாப்பாடு உடனே வரவில்லையென் றால் கிளம்பிவிடுவேன் என்று வெளிநாட்டவர்போல் தெரிந்த ஒருவர் சத்தம் போட்டுக்கொண்டி ருந்தார். அவருடன் வந்திருந்த மாது அவரை சமாதானப்படுத்திய பின்னர் அவரது கோபம் தணிந்தது.
இதுபோன்ற சம்பவங்கள் நடந் தாலும் புன்னகையோடு வியா பாரத்தை வழிநடத்துகிறார் திரு கமாலுதீன்.
"சண்டை வழக்கமானதல்ல. ஆனால் சண்டை நடப்பதுண்டு. முறைத்துப் பார்ப்பது அல்லது பெண்களால்தான் சண்டை தொடங்கும்," என்றார் அவர்.
"வாடிக்கையாளர்கள் வாந்தி எடுப்பதும் உண்டு. அல்லது கடை யிலேயே தூங்கிவிடுவதும் உண்டு. எழுந்து போகமாட்டார்கள். சிலர் ஊழியர்களிடம் சத்தம் போடுவார் கள், உணவை அவர்கள் மேல் வீசுவார்கள்," என்று இரவு நேரங் களில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி விவரித்தார் திரு கமாலுதீன்.
சிலவேளைகள் குழுவாக உண வருந்த வரும் இள வயதினர், கட்டணம் செலுத்தாமல் ஒவ்வொரு வராகக் கிளம்பிவிடுவதுண்டு என்ற அவர் அத்தகைய சம்பவம் ஒன்றை நினைவுக்கூர்ந்தார்.
"கடைசியாக கிளம்பியவர் தமது உணவுக்கு மட்டுமே கட்ட ணம் செலுத்தினார். மற்றவர்களுக் கான கட்டணம் பற்றிக் கேட்ட போது அவர்களைத் தமக்குத் தெரியாது என்றார். இழப்புதான் ஆனால், எங்களால் என்ன செய்ய முடியும். விட்டுவிட வேண்டியது தான்," என்றார் திரு கமாலுதீன்.
அந்த உணவகத்துக்குள் பல வழிகளில் நுழையலாம். கடையைச் சுற்றி பல கண்காணிப்பு கேமராக்க ளும் பொருத்தப்பட்டுள்ளன. கடை யில் நடப்பதை வாசலுக்கு அருகிலுள்ள திரையில் நேரடியாகப் பார்க்க முடியும்.
கேமராவில் சம்பவங்கள் பதி வாகி இருந்தபோதும் ஊழியர்கள் காவல்துறையினரைக் கூப்பிடத் தயங்குவார்கள்.
"ஏதற்காக போலிசாரை அடிக் கடி கூப்பிட்டு தொந்தரவு செய்ய வேண்டும்? அவர்கள் வந்தாலும் அதிகம் செய்ய முடியாது," என்றார் திரு கமாலுதீன்.
பரோட்டா கடையில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் மலேசியா, இந்தியா போன்ற நாடு ளைச் சேர்ந்தவர்கள். சம்பாதிப்பதற் காக சிங்கப்பூருக்கு வந்தவர்கள். சிலர் தொடர்ச்சியாக ஓய்வின்றி இரவு நேர வேலை செய்கிறார்கள். விடுப்பைச் சேர்த்து வைத்து நீண்ட விடுமுறையில் குடும்பத் தைப் பார்க்கச் செல்கிறார்கள்.
ஆனால் பசியோடு வரும் சிங்கப்பூரர்களுக்கு, அதுவும் போதையில் இருப்பவர்களுக்கு சேவையாற்றுவது சுலபமல்ல.
குடியிருப்பு பேட்டைகளிலும் போதையில் வரும் வாடிக்கையாளர் களுக்குப் பஞ்சம் இல்லை.
2017ஆம் ஆண்டு, தெம்பனிஸ் வட்டாரத்திலுள்ள 'மிஸ்டர் பரோட்டா' உணவகத்தில் போலிஸ் அதிகாரிகள் இருந்த போதும்கூட சமையல்காரரை போதையிலிருந்த வாடிக்கையாளர் ஒருவர் கையால் குத்தினார். குற்றத்தைப் புரிந்தவர் பின் சிறை சென்றார்.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக அந்த உணவகத்தில் வேலை செய்யும் மலேசியரான திரு சுரேஷ் குமார், 33, அந்த வட்டாரத்தில் பல காபி கடைத்தொகுதிகளில் நள்ளிரவு வரை 'பீர்' விற்பார்கள் என்றும் வீவக அடுக்குமாடி கட்டடங்களின் கீழ்த்தளத்தில் கும்பலாகக் கூடி மது அருந்தவது வழக்கம் என்றும் கூறினார்.
"பல குழுக்கள் இந்த வட்டாரத் தில் குடித்துவிட்டுச் சத்தம் போடு வதைப் பார்த்திருக்கிறேன். நமது கடைக்கு எதிரேயுள்ள கட்டடத் தின் கீழ்த்தளத்திலிருந்த மேசை, நற்காலிகள் குடியிருப்பாளர்கள் கொடுத்த புகார்களினால் அகற் றப்பட்டன," என்றார் திரு சுரேஷ்.
சில நேரங்களில் வாடிக்கை யாளர்கள் கட்டணம் செலுத்த மறந்துவிடுவதுண்டு. ஆனால் அவர்களைத் துரத்தினால், பிறகு கட்டிவிடுவார்கள் என்று சிரித்தபடி கூறினார் அவர்.
இப்படி இலவசமாக பரோட்டா சாப்பிடுவது அண்மையில் ஒரு பெரிய பிரச்சினைக்குக் காரண மாக அமைந்தது.
கிளமெண்டி பகுதியில் அமைந் துள்ள 'ஹபிப் எக்ஸ்பிரஸ் என்ற உணவகத்தில் கடந்த ஆண்டு இலவசமாக பரோட்டா கொடுக்க மறுத்ததால் மது போதையில் இருந்த மூவர் ஒரு சமையல்காரரை கத்தியால் குத்தினார்கள்.
ஏறக்குறைய முன்று ஆண்டு களுக்கு முன்பு வரை தமது கடையில் சிலர் இலவசமாக சோறு, பரோட்டா கேட்பது வழக்க மாக இருந்தது எனக் கூறினார் ஹபிப் எக்ஸ்பிரஸ் கடையின் முத லாளி திரு முகம்மது ஹபிப், 33.
நல்லெண்ணத்தின் அடிப்படை யில் எப்போதும் சாப்பாடு கொடுக் கும் அக்கடையினர், மதுபோதை யில் வந்ததால் அந்த மூவருக்கும் இலவசமாக உணவு கொடுக்க மறுத்தனர்.
"அண்மையில் மூவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது என் ஊழியர்களுக்குத் தைரியத் தைக் கொடுத்துள்ளது. சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும் அவர்களின் பாதுகாப்புக்கு உத்திர வாதம் இருக்கிறது என்றும் அவர் களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது," என்று கூறினார் திரு ஹபிப்.
இதில் முக்கியமாக அடிப்படை மரியாதையும் மனிதநேயமும் தேவை என்பது அவரின் கருத்து.
"என் ஊழியர்கள் பெரும்பாலும் இந்தியாவிலிருந்து வந்தவர்கள். சில சமயங்களில் அவர்கள் சிங்கப்பூரர்களால் கேலி செய்யப் படுவார்கள். 'உனக்கு ஆங்கிலம் தெரியாதா, தெரியாது என்றால் என்னிடம் ஆங்கிலம் பேசாதே' என்பார்கள் சிலர். மற்றொரு சமயத்தில் 'நீ இந்தியாவிருந்து வந்தவன்தானே திரும்பப் போ' என்றெல்லாம் புண்படும் வகையில் பேசுவார்கள்," என வருத்தப்பட்டார் திரு ஹபிப்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!