தமிழ்க் கற்பித்தலில் மரபையும் பண்பாட்டையும் ஈடுபடுத்த கருத்து பரிமாறிய தமிழாசிரியர்கள் 

தமிழை ஒரு மொழியாக மட்டுமல் லாமல் நமது வாழ்வியல் சார்ந்த கருத்துகளையும் சேர்த்து பிள்ளை களின் வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசிய கூறாகப் பார்க்க வேண்டும் என்பதை தமக்கே உரிய பாணியில் டாக்டர் காதர் இப்ராஹிம் கூறினார்.

'தமிழ்மொழி கற்பித்தலில் மர பும் பண்பாடும்' என்ற தலைப்பில் கருத்தரங்கத்திற்கு சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் ஏற்பாடு செய் திருந்தது.
கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் 'தமிழவேள் நினைவுக் கருத் தரங்கு' என்ற நிகழ்ச்சியில் இவ் வாண்டு பிரபல தன்முனைப்புப் பேச்சாளர் டாக்டர் காதர் இப்ரா ஹிம் சிறப்புரை ஆற்றினார்.

தமிழாசிரியர்கள் என்ற முறை யில் நன்கு படிக்கக்கூடிய பிள்ளை கள் சிறந்து விளங்குவதை உறுதி செய்வதோடு சிரமப்படும் மாணவர் களை முன்னேற்றம் அடையவைப்ப தில்தான் அவர்கள் இன்பம் காண வேண்டும் என்று அவர் கூறினார்.
பண்பாடு என்பது காலங் களுக்கேற்ப மாறிவரும் என்று குறிப்பிட்ட அவர், கல்வி கற்றலை மாணவர்கள் விரும்பி படிக்க வேண்டும் என்றும் மாணவர் களுக்கு ஆசிரியர்களின் மீதும் பாடங்களின் மீதும் விருப்பம் ஏற் பட்டால்தான் அவர்கள் சிறந்து விளங்குவார்கள் என்றும் நினை வுறுத்தினார்.

நகைச்சுவை கலந்த விறு விறுப்பான சொற்பொழிவிற்குப் பின்னர், அவர் முனைவர் சீதா லட்சுமி, முனைவர் ஜெயராஜதாஸ் பாண்டியன், திரு சி சாமிக்கண்ணு ஆகியோருடன் கலந்துரையாடலில் கலந்துகொண்டு, ஆசிரியர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில ளித்தார்.

வகுப்பறையில் இடம்பெற்று வரும் மாற்றங்கள், மரபுகள் தொடர்பான விளக்கங்கள் என பலதரப்பட்ட வினாக்கள் எழுப்பப் பட்டு அவற்றுக்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
பாலர் பள்ளிகளில் எவ்வாறு பண்பாட்டையும் கலாசாரத்தையும் இணைத்து பாடத்திட்டங்கள் உரு வாக்கலாம் என்று கேள்வி எழுப் பினார் நீ ஆன் பலதுறைத் தொழிற் கல்லூரியில் ஆரம்பகாலக் கல்வி யுடனான தமிழ்மொழி பட்டயக் கல்வி பயின்றுவரும் ஆர்த்தி கிருஷ்ணமூர்த்தி.

பாலர் பள்ளி மாணாக்கருக்கும் தமிழ் மரபு, கலாசாரம் தொடர்பான பாடங்கள் கற்பிக்க இயலும் என்று நம்பிக்கை தெரிவித்தனர் கருத் தரங்கப் பேச்சாளர்கள்.
"சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் ஏற்பாடு செய்துவரும் இந் தக் கருத்தரங்கத்தில் முதன்முறை யாக பாலர் பள்ளி தமிழாசிரியர் களாகப் பணிபுரியவிருக்கும் மாணவர்கள் பங்கெடுத்தனர்", என்று பெருமிதம் கொண்டார் தமிழாசிரியர் சங்கப் பொதுச் செய லாளர் திரு தனபால் குமார்.

நீ ஆன் பலதுறைத் தொழிற்கல் லூரியில் தொடங்கப்பட்ட புதிய பட்டயக் கல்விப் பாடத்திட்டத்தில் பயின்றுவரும் முதல் வகுப்பு மாணவர்கள் தற்போது தங்களின் மூன்றாவது ஆண்டில் பயில்கின் றனர்.
சிங்கப்பூரில் தமிழ்மொழிப் புழக்கம் இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று தமது உரையில் குறிப்பிட்டார் சிங்கப்பூர்த் தமிழா சிரியர் சங்கத்தின் தலைவர் திரு சி சாமிக்கண்ணு.

"தமிழ்மொழியின் புழக்கத்தை அதிகரிக்கவேண்டும் என்ற நோக் கத்தில் வளர்தமிழ் இயக்கம் தொடங்கப்பட்டு இருபது ஆண் டுகள் ஆகின்றன. அந்த அமைப்பு ஏற்பாடு செய்யும் தமிழ்மொழி விழா பதின்மூன்றாவது முறையாக இப்போது நடைபெற்றுகொண்டிருக் கிறது. ஆனால் தமிழ்மொழியின் புழக்கம் போதிய அளவு அதிகரிக் காமல் உள்ளது.

"ஆண்டுதோறும் இளையர்கள் அதிகளவில் தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். அது மனநிறைவு தருகிறது. ஆனால் தமிழ்மொழி விழாவில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக் காக இன்னும் அதிகளவில் நிகழ்ச்சிகள் நடத்தப்படவேண்டும்.

"தமிழ் அமைப்புகள் தங்களின் நிகழ்ச்சிகளில் தொடக்கப் பள்ளி மாணவர்களை எவ்வாறு இணைத் துக்கொள்ளலாம் என்பதைப் பற்றி சிந்திந்து, நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால் தமிழ்மொழிப் புழக் கத்தை வருங்காலங்களில் அதிக ரிக்கமுடியும்," என்று அவர் கூறி னார்.

தன்முனைப்புப் பேச்சாளர் டாக்டர் காதர் இப்ராஹிமின் (இடது) உரையை, நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கேட்கின்றனர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!